இந்தியாவில் புதிய வியூவ்சோனிக் டேப்லெட் அறிமுகம்!

By Karthikeyan
|
இந்தியாவில் புதிய வியூவ்சோனிக் டேப்லெட் அறிமுகம்!

இந்தியாவின் கணினிச் சந்தை எப்போதுமே பரபரப்புடன் காணப்படுகிறது. ஏனெனி்ல் இந்திய நிறுவனங்கள் மட்டுமல்லாமல் பன்னாட்டு நிறுவனங்களும் தமது தயாரிப்புகளை உடனுக்குடன் களமிறக்கிக் கொண்டிருக்கின்றன. அந்த நிறுவனங்களில் ஒன்று வியூவ்சோனிக்.

அந்த நிறுவனம் சமீபத்தில் வியூவ்பேட் 10எஸ் என்ற புதிய 10 இன்ச் டேப்லெட்டை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த வியூவ்பேட் டேப்லெட் பல முக்கிய அம்சங்களைக் கொண்டு வருகிறது.

இந்த வியூவ்பேட் டேப்லெட்டின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது கூகுள் ஆன்ட்ராய்டு ப்ரேயோ இயங்கு தளத்தைக் கொண்டிருக்கிறது. இதன் டிஸ்ப்ளே 10.1 இன்ச் ஆகும். இந்த டிஸ்ப்ளே எல்இடி பேக்லிட் வசதியையும் அதே நேரத்தில் 1024 x 600 பிக்சல் ரிசலூசனையும் கொண்டுள்ளது.

ஒரு கேமரவை மட்டுமே இந்த டேப்லெட் கொண்டிருக்கிறது. அதாவது இதன் 1.3 மெகா பிக்சல் கொண்ட முகப்பு கேமரா மூலம் வீடியோ காலிங் செய்வது எளிதாக இருக்கும். இதன் ரேம் 512 எம்பி மெமரியைப் பெற்றுள்ளது. இதை 32ஜிபி வரை விரிவுபடுத்த முடியும். அதற்காக மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட்டும் இந்த டேப்லெட்டில் உள்ளது.

இந்த வியூவ்பேட் டெப்லெட் 3ஜி சப்போர்ட்டைக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த டேப்லெட்டன் பிராசஸர் டூவல் கோர் என்விடியா டேக்ரா 2 ஆகும். அதுபோல் என்விடியாவின் க்ராபிக்ஸ் யூனிட்டையும் கொண்டுள்ளது. இந்த க்ராபிக்ஸ் ப்ராசஸருக்கு குறைந்த மின்சாரமே தேவைப்படும்.

இந்த வியூவ்பேட் டெப்லட் டூவல் கோர் ப்ராசஸர் கொண்டிருப்பதால் எவ்வளவு அதிகமான வேலைகளையும் மிக விரைவாகச் செய்து முடிக்கும். மேலும் தனியாக க்ராபிக்ஸ் யூனிட் உள்ளதால் க்ராபிக்ஸ் வேலைகளையும் இந்த டேப்லெட்டில் மிக அருமையாகச் செய்யலாம். மேலும் இந்த டேப்லெட் குறைந்த மின்சாரத்தையே பயன்படுத்துவதால் இதை நீண்ட நேரம் இயக்க முடியும்.

இந்த டேப்லெட்டின் விலை ரூ.17000 ஆகும். குறிப்பாக அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு எற்ற டேப்லெட்டாக இந்த வியூவ்பேட் இருக்கும் என்று நம்பலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X