Home
Computer

அற்புதமான வியூபேட் 7எக்ஸ் மற்றும் அட்டகாசமான லெனோவா லிபேட் எ1-07

By Super
அற்புதமான வியூபேட் 7எக்ஸ் மற்றும் அட்டகாசமான லெனோவா லிபேட் எ1-07
லெனோவாவின் கணினி தாயாரிப்புகளுக்கு எப்போதுமே நற்பெயர் உண்டு. அவர்களின் லெனோவா லிபேட் எ1-07க்கு வியூசோனிக் வியூபேட் 7எக்ஸ் போட்டியாக வந்திருக்கிறது. இரண்டு லேப்டாப்புகளும் அமைப்பிலும், தொழில் நுட்பத்திலும் மற்றும் செயல்திறனிலும் ஒன்றையொன்று விஞ்சும் வகையில் இருக்கின்றன.

வியூசோனிக் வியூபேட் 7எக்ஸ் 7இன்ச் எல்இடி டிஸ்ப்ளே திரையுடன் 600 x 1024 ரிசலூசன் கொண்டு 10 புள்ளி மல்டி டச் செயல்பாட்டைக் கொண்டுள்ளது. லெனோவா லிபேட் எ1-07 7இன்ச் தொடுதிரையுடன் 600 x 1024 பிக்ஸல் ரிசலூசனைக் கொண்டிருக்கிறது.

இரண்டுமே ஆண்ட்ராய்டு லேப்டாப்புகளாகும். அதாவது வியூபேட் ஆன்ட்ராய்டு வி3.2 ஹனிகோம்ப்பிலும் லிபேட் எ1-07 ஆன்ட்ராய்டு வி2.3 ஜிஞ்சர்ப்ரீடலும் இயங்குகிறது. லிபேட் 1ஜிஹர்ட்ஸ் டெக்ஸஸ் இன்ஸ்ட்ரூமென்டஸ் ஒஎம்எபி 3622 ப்ராசஸருடன் 512எம்பி ராமைக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் வியூபேட் என்விடியா டேக்ரா 2 டி20 டூவல் கோர் ப்ராசஸருடன் க்வல்காம் எம்எஸ்எம் 7227 சிப்செட்டைக் கொண்டிருக்கிறது.

இரண்டு லேப்டாப்புகளுமே அதி வேகம் கொண்டவை. ஆனால் வீயூபேடில் எச்எஸ்பிஎ+ வசதி உள்ளதால் இதில் வேகமாக இண்டர்நெட்டை இயக்கலாம். மேலும் எச்டி வீடியோவை பார்க்க வேண்டுமென்றாலும் இந்த வியூபேட் சிறந்ததாக இருக்கும். ஏனெனில் வியூபேட் எச்டி டிவியை சப்போர்ட் செய்யும் எச்டிஎம்ஐ போர்ட்டை கொண்டுள்ளது. மேலும் வியூபேட் டிஎஸ்என்எ வசதியும் கொண்டுள்ளதால் அதே எல்எஎன்னில் டிவைஸ்களை தொடர்பு படுத்த முடியும்.

கேமரா வசதியைப் பார்த்தால் இரண்டு லேப்டாப்புகளும் 2 கேமராக்களைக் கொண்டுள்ளன. அதாவது லெனோவா லிபேட் எ1-07 3மெகா பிக்ஸல் ரியர் கேமராவுடன் விஜிஎ முகப்பு கேமராவும் கொண்டிருக்கிறது. வியூபேட் 7எக்ஸ்ல் உள்ள கேமரா மூலம் 1080பி முழு எச்டி வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் வியூபேட் டிவ்எக்ஸ் மற்றும் டபுள்யுஎம்வி2 போன்றவற்றை சேர்த்து எல்லா வீடியோ பைல்களையும் சப்போர்ட் செய்யும். அதேபோல் லிபேட் எம்பி4யும் சப்போர்ட் செய்யும்.

லெனோவா லிபேட் எ1-07 இன்டக்ரேட்டட் வைபை ப்ரோட்டோகால் மற்றும் 802.11 பி/ஜி/என் அதிவேக வைபை தொடர்பை கொண்டிருக்கிறது. இரண்டு லேப்டாப்புகளுமே எ-ஜிபிஎஸ் வசதியைக் கொண்டிருக்கின்றன. லெனோவா லிபேட் எ1-07 கறுப்பு, வெள்ளை, ஊதா மற்றும் பிங்க் நிறங்களில் வந்து ரூ. 19,000க்குள் இருக்கிறது. வியூபேட் 7எக்ஸ் கப்பு நிறத்தில் வந்து ரூ.28,000க்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X