நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய வியூவ்சோனிக் டேப்லெட்!

Posted By: Karthikeyan
நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய வியூவ்சோனிக் டேப்லெட்!

இந்த வருடம் வியூவ்சோனிக் நிறுவனம் பல நல்ல டேப்லெட்டுகளை களமிறக்கி இருக்கிறது. அவற்றில் இ70, இ100, பி100 மற்றும் 10பிஐ போன்ற டேப்லெட்டுகள் மக்களின் வரவேற்பை ஓரளவுக்குப் பெற்றுள்ளன.

அந்த வகையில் இப்போது வியூவ்சோனிக் நிறுவனம் ஒரு புதிய டேப்லெட்டைக் களமிறக்க இருக்கிறது. இந்த புதிய டேப்லெட்டிற்கு இ72 என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இது ஒரு ஆன்ராய்டு டேப்லெட் ஆகும். மேலும் இது ஆன்ட்ராய்டு 4.0 ஐசிஎஸ் இயங்கு தளத்தில் இயங்குகிறது.

இந்த 7 இன்ச் டேப்லெட் கோர்ட்டெக்ஸ் எ9 ப்ராசஸர் கொண்டு வருகிறது. அதனால் இந்த டேப்லெட்டின் இயங்கு வேகம் மிக அபாரமாக இருக்கும். மல்டி டச் கொண்ட இதன் 7 இன்ச் டிஸ்ப்ளே மிகத் துல்லியமாக இருக்கும். அதோடு இந்த டேப்லெட் ஜி சென்சாருடன் கூடிய சென்சிட்டிவிட்டி வசதிகளையும் வழங்குகிறது.

இந்த டேப்லெட் 1ஜிபி அளவில் டிடிஆர்3 ரேம் கொண்டிருப்பதால் இதில் பல வேலைகளை மிக அருமையாகச் செய்ய முடியும். மேலும் இந்த டேப்லெட்டில் 32 ஜிபி வரை அதிகரிக்கக் கூடிய அளவிள்கு 8ஜிபி அளவில் ப்ளாஷ் மெமரியும் உள்ளது.

இணைப்பு வசதிகளுக்காக இந்த டேப்லெட் ஒரு மினி எச்டிஎம்ஐ அவுட்புட், யுஎஸ்பி போர்ட் மற்றும் வைபை போன்ற வசதிகளைக் கொண்டிருக்கிறது. இதன் 0.3எம்பி முகப்புக் கேமரா மூலம் மிக சூப்பராக வீடியோ உரையாடலை நடத்த முடியும்.

இந்த டேப்லெட் மிக ஸ்டைலாகவும் வந்துள்ளது. அதே நேரத்தில் இதன் பேட்டரி இந்த டேப்லெட்டிற்கு 4 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. அதோடு இந்த டேப்லெட்டில் ஏராளமான சாப்ட்வேர்களும் உள்ளன. குறிப்பாக 1மொபைல் மார்க்கெட், ஆன்ட்ராய்டுக்கான கின்டில், அமேசான் எம்பி3, டியூன் இன் ரேடியோ, ஒய்ல்டு டான்ஜென்ட் அடோப் ரீடர், ஆடிபிள், ஐஎம்டிபி, ப்ரீப்மீ, ட்ராப்பாக்ஸ், ஆபிஸ் சூட், போல்காஸ்ட், எவர்நோட், ஐஎம்+ நோட் எவரிதிங்க், ஸ்கெட்சர் மற்றும் ஸ்கைப் போன்ற சாப்ட்வேர்கள் உள்ளன.

இந்த டேப்லெட் விரைவில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot