Home
Computer

இரண்டு இயங்கு தளங்களுடன் வரும் வியூவ்பேட் டேப்லெட்!

By Karthikeyan
இரண்டு இயங்கு தளங்களுடன் வரும் வியூவ்பேட் டேப்லெட்!

வியூவ் சோனிக் நிறுவனம் தனது புதிய வியூவ் சோனிக் வியூவ்பேட் 10 பிஐ என்று புதிய டேப்லெட்டை களமிறக்குகிறது. இந்த டேப்லெட்டின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால் இது இரண்டு பூட் வசதியைக் கொண்டிருக்கிறது. அதனால் இதில் ஒரே நேரத்தில் இரண்டு வேறுபட்ட இயங்கு தளங்களை இன்கார்பரேட் செய்ய முடியும். இப்போது இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு 2.3 மற்றும் விண்டோஸ் 7 ப்ரபசனல் போன்ற இரண்டு இயங்கு தளங்களைக் கொண்டு வருகிறது.

இந்த வியூவ் பேட் டேப்லெட்டின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் அது 10.1 இன்ச் அளவுள்ள கெப்பாசிட்டிவ் தொடுதிரை கொண்டு அதில் மல்டி டச் வசதியை வழங்குகிறது. இதன் பின்பக்க கேமராவை எடுத்துக் கொண்டால் அது ஆட்டோ போக்கஸ் வசதி கொண்டு 3.2 எம்பி பிக்சலுடன் வருகிறது. அதுபோல் இது 1.3 பிக்சல் கொண்ட முகப்பு கேமராவையும் கொண்டிருக்கிறது. இந்த முகப்பு கேமரா மூலம் வீடியோ காலிங்கை மிக அற்புதமாகச் செய்ய முடியும்.

அடுத்ததாக இந்த டேப்லெட்டின் ப்ராசஸரைப் பார்த்தால் அது சிங்கிள் கோர் ப்ராசஸரைக் கொண்டுள்ளது. அதுபோல் இதில் ஒஎகே ட்ரெய்ல் ஸட்670ம் உண்டு. அதுபோல் இது க்ராபிக்ஸ் வேலைகளுக்காக க்ராபிக்ஸ் ப்ராசஸரையும் கொண்டிருக்கிறது.

இதன் பொதுவான அம்சங்களைப் பார்த்தால் டேட்டா மேனேஜ்மென்டிற்காக எச்டிஎம்ஐ, டபுள்யுலேன், வைபை மற்றும் ப்ளூடூத் ஆகிய இணைப்பு வசதிகளைக் கொண்டிருக்கிறது. ஆனால் இதில் இன்ப்ரேர்டு போர்ட் இல்லை. அதுபோல் மைக்ரோ யுஎஸ்பி வி2.0 இணைப்பு உள்ளது. மேலும் ஜிபிஎஸ் வசதியும் இந்த டேப்லெட்டில் உண்டு.

பொழுதுபோக்கு அம்சங்களுக்காக இந்த டேப்லெட் ஆடியோ ப்ளேயர், வீடியோ ப்ளேயர், வீடியோ கேம்கள் போன்றவற்றை வழங்குகின்றன. அதுபோல் இதில் எச்டிஎம்எல் மற்றும் ப்ளாஷ் போன்ற ப்ரவுசர்களும் உண்டு. இறுதியாக இந்த டேப்லெட் யுடியூப் மற்றும் பிக்காசா போன்ற ஆன்லைன் சப்போர்ட்டுகளையும் வழங்குகிறது.

இந்த டேப்லெட் மிகவும் அடக்கமான டிவைஸ் ஆகும். இதன் எல்சிடி திரை மல்டி டச் கட்டளைகளை ஏற்றுக்கொள்கிறது. மேலும் இதில் படங்களை மிக எளிதாக சூம் செய்ய முடியும். அதுபோல் வெப் பக்கங்களை மிக எளிதாக ஸ்க்ரோல் செய்ய முடியும்.

இதன் கேமராக்கள் மிக பக்காவான படங்களை எடுக்கும். மற்றும் வீடியோ ரிக்கார்டிங்கும் இதில் சூப்பராக இருக்கும். அதுபோல் இந்த டேப்லெட் ஸ்வைப் ஆன்ஸ்க்ரீன் கீபோர்டையும் வழங்குகிறது. அதனால் சாதாரண கீபோர்டில் டைப் செய்வதைவிட இதில் மிக விரைவாக டைப் செய்ய முடியும். மேலும் இது 2 இயங்கு தளங்களைக் கொண்டு வருவதால் இதை சாதாரணமாகவும் அதே நேரத்தில் வர்த்தக காரணங்களுக்காகவும் பயன்படுத்த முடியும்.

இந்த வியூவ்பேட் டேப்லெட்டில் பொழுதுபோக்கிற்காக மீடியா ப்ளேயர் உண்டு. இந்த டேப்லெட்டின் விலை ரூ.40,000 ஆகும். விலை அதிகமாக இருந்தாலும் இதன் முக்கிய அம்சங்கள் அதைவிட அதிகமாக இருக்கின்றன. மேலும் இந்த டேப்லெட் அடுத்த மாதம் வரும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X