உபயோமான கூகுள் க்ரோம் பயன்பாடு மற்றும் தந்திரங்கள்

By Meganathan
|

இன்டெர்நெட் பயன்படுத்தும் பலரும் கூகுள் க்ரோம் கட்டாயம் பயன்படுத்தி வருகின்றனர். கூகுள் க்ரோம் பயன்படுத்த அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதை ஓபன் செய்து பேஸ்புக், யூ-ட்யூப் பக்கங்களை பயன்படுத்தியிருப்பீர்கள்.

இவை அல்லாமல் கூகுள் க்ரோம் மூலம் பல விஷயங்களை செய்ய முடியும். அன்றாட வாழ்க்கைக்கு பயன்படும் சில விஷயங்களும் இன்டெர்நெட் பயன்பாட்டை எளிமையாக்கும் சில தந்திரங்களும் கூகுள் க்ரோமில் இருக்கின்றது. அனைவருக்கும் உபயோகமான சில கூகுள் க்ரோம் தந்திரங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பார்க்க தவறாதீர்கள்.

1

1

கூகுள் க்ரோமில் இன்பில்ட் பிடிஎஃப் ரைட்டர் உள்ளது, இதன் மூலம் Ctrl+P கொடுத்து "Save as PDF" என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால், நீங்கள் தேர்வு செய்த பக்கம் பிடிஎஃப் ஃபைலாக சேவ் செய்து கொள்ள முடியும்

2

2

கூகுள் க்ரோமில் பல வித கீபோர்டு ஷார்ட்கட்கள் கொடுக்கப்பட்டுள்ளது, உங்களுக்கு ஏற்ற ஷார்கட்களை செட் செட் செய்ய அட்ரஸ் பாரில் chrome://extensions என டைப் செய்து பக்கத்தின் கடைசியில் கீபோர்டு ஷார்கட்களை தேர்வு செய்ய வேண்டும்

3

3

கூகுள் க்ரோமின் வெப் ஹிஸ்ட்ரியை டெலீட் செய்ய உங்களுக்கு தேவையான சில பக்கங்களை மட்டும் தேர்வு செய்து டெலீட் செய்து கொள்ளலாம்.

4

4

புதிய வகை க்ரோம்களில் எக்ஸ்டென்ஷன்களை இன்ஸ்டால் செய்ய முடியாது, இருந்தும் க்ரோமின் எக்ஸ்டென்ஷன் பக்கத்தில் டெவலப்பர் மோட் ஆப்ஷனை ஆன் செய்து உங்களுக்கு தேவையான எக்ஸ்டென்ஷன்களை சேர்த்து கொள்ளலாம்.

5

5

தொடர்ச்சியான பயன்பாடு க்ரோம் வேகத்தை குறைக்கலாம், இந்த நிலையில் க்ரோமை ரீஸ்டார்ட் செய்வது சிறந்தது. இல்லை என்றால் க்ரோம் டூல்ஸ் - டாஸ்க் மேனேஜர் - சென்று அதிக மெமரியை பயன்படுத்தும் வெப்சைட்களில் இருந்து வெளியேற வேண்டும்.

6

6

கணினியில் நீங்கள் இருக்கும் இடத்தை மாற்றியமைக்க டூல்ஸ் - டெவலப்பர் டூல்ஸ் சென்று Esc பட்டனை அழுத்த வேண்டும், அதன் பின் எமுலேஷன் டேப் சென்று விருப்பப்பட்ட இடத்தை தேர்வு செய்து கொள்ளலாம்

7

7

மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பாஸ்வேர்டுகளை மீட்க டெவலப்பர் டூல்ஸ் சென்று பாஸ்வேர்டு ஃபீல்டை தேர்வு செய்து பாஸ்வேர்டை இன்புட் டைப்பில் இருந்து டெக்ஸ்டாக மாற்ற வேண்டும்.

8

8

க்ரோமில் இருந்து புதிதாக மெயில் எழுத ஜிமெயில் தளத்திற்கு சென்று கம்போஸ் பட்டனை அழுத்த வேண்டியதில்லை மாறாக ப்ரவுஸரின் அட்ரஸ் பார் சென்று mailto:recipient@domain.com டைப் செய்தால் தானாக ஜிமெயில் கம்போஸ் தளம் ஓபன் ஆகும்.

9

9

கூகுள் க்ரோமில் குறிப்புகளை எடுக்க புதிய டேப் ஒன்றை ஓபன் செய்து அதில் data:text/html, பேஸ்ட் செய்து டைப் செய்ய துவங்கலாம்.

10

10

விருப்பப்பட்ட ஆடியோ, வீடியோ, டெக்ஸ்ட் மற்றும் பிடிஎஃப் டாக்குமென்ட்களை க்ரோம் வீடியோவில் ஓபன் செய்யலாம்

Most Read Articles
Best Mobiles in India

English summary
Useful Tips and Tricks for Google Chrome. Here you will find the most useful tips and tricks for Google Chrome that will help you work faster and do more with your favorite web browser.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X