3 புதிய அப்ளிகேஷன்களுடன் வரும் பிளாக்பெர்ரி ப்ளேபுக்!

இதில் புதிய செய்தி அப்டேட் செய்யப்பட்ட பிளாக்பெரி ப்ளேபுக் வரும் ஆண்டு பிப்ரவரி மாத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதில் 3 புதிய சிஸ்டம் அப்ளிகேசன்கள் அப்டேட் செய்யப்பட இருக்கிறது. இமெயில் க்ளையின்ட், காலண்டர் மற்றும் கான்டக்ட் அப்ளிகேசன் ஆகிய புதிய அப்ளிகேஷன்களை வழங்க உள்ளது.
கிடைத்துள்ள தகவலின்படி இமெயில் க்ளேயன்ட் ஸ்பிலிட் ஸ்க்ரீன் இன்டர்பேஸ் தொழில் நுட்பத்தைக் கொண்டிருக்கிறது. அதன்படி திரையின் இடது பக்கம் இமெயில் அட்டவணை இருக்கும். தேர்ந்தெடுக்கும் இமெயில் திரையின் நடுப்பக்கம் தெரியும். டூல்பார் பிளாக்பெரி ப்ளேபுக் திரையின் வலது பக்கம் டூல்பார் தெரியும். இந்த புதிய டிவைஸ் மிகவும் நிறைவான வசதிகள் மற்றும் யூசர் ப்ரண்ட்லி சாதனமாக இருக்கும்.
காலண்டர் அப் ஒரு புதிய அப்பளிகேசன். இது வரவிருக்கும் அப்டேட் செய்யப்பட்ட ப்ளேக்பெரி ப்ளேபுக்கில் கிடைக்கும். இது இமெயில் க்ளையின்ட் அப்ளிகேஷனை ஒத்திருக்கும். ஆனால் இதில் டூல்பார் இடது பக்கம் இருக்கும். அதுபோல் மாதம் நடுவிலும் தேதி வலது பக்கமும் இருக்கும்.
இறுதியாக கான்டாக்ட் அப்ளிகேசன் அப்டேட் செய்யப்பட்ட பிளாக்பெரிய ப்ளேபுக்கில் சேர்க்கப்படும். இந்த புதிய அப்ளிகேசனில் சேமிப்பு வசதி பழைய ப்ளாக்பெரியை விட அதிகமாக இருக்கும். இதில் உள்ள கீபோர்ட் மிகவும் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications