Home
Computer

புதிய அமேசான் கிண்டில்பயர் டேப்லெட்!

By Karthikeyan
புதிய அமேசான் கிண்டில்பயர் டேப்லெட்!

கடந்த வாரம் அமேசானின் 2 புதிய கின்டில் பயர் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அதில் ஒன்று 7 இன்ச் மற்றொன்று 9 இன்ச் அளவைக் கொண்டிருக்கும். இந்த புதிய டேப்லெட்டுகள் களமிறங்கும் நாட்கள் அறிவிக்கப்படவில்லை. புதிதாக வந்த தகவலின் படி வரும் மே மாதத்திலேயே வந்துவிடும் என்று தெரிகிறது.

இந்த புதிய கின்டில் பயர் டேப்லெட்டின் பெயர் அமேசான் கின்டில் பயர் 2 ஆகும். இதன் 7 இன்ச் மாடல் பழைய கின்டில் பயர் மாடலுக்கு பதிலியாக இருக்கும். இதன் 9 இன்ச் மாடல் மிகவும் மேம்பட்டு தனித்துவமாக இருக்கும். இவற்றின் ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் வசதிகளைப் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இப்பொழுது உள்ள கின்டில் பயரே மிக அருமையாக உள்ளது. அது மேலும் அப்டேட் செய்யப்பட்டு வந்தால் கண்டிப்பாக எல்லோரும் வாங்கக்கூடிய டேப்லெட்டாக மாறிவிடும்.

ஒரு சில தகவல்களின்படி இந்த புதிய டேப்லெட்டுகள் மேம்பாட்டுக்காக இன்னும் தயாரிப்பு நிலையிலேயே இருக்கின்றன. குவான்டா மட்டும் இவற்றைத் தயாரிக்கவில்லை. மாறாக பாக்ஸ்கான் நிறுவனமும் சேர்ந்து இந்த புதிய மாடல்களைத் தயாரிக்கின்றன.

இதன் விலையும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இப்போது அமேசான் தனது டேப்லெட்டுகளைக் குறைந்த விலையிலேயே விற்பனை செய்து வருகின்றது. அதனால் புதிய டேப்லெட்டுகளும் குறைந்த விலையிலேயே வரும் என்று நம்பப்படுகிறது. ஆனால் அதைப் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இன்னும் வரவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X