Home
Computer

சிபிஎஸ்இ பாடங்களுடன் புதிய யூபிஸ்லேட் டேப்லெட்!

By Karthikeyan
சிபிஎஸ்இ பாடங்களுடன் புதிய யூபிஸ்லேட் டேப்லெட்!

ஆகாஷ் டேப்லெட்டைத் தயாரித்த டேட்டா விண்ட் நிறுவனம் சமீபத்தில் இரண்டு புதிய டேப்லெட்டுகளைக் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய டெப்லெட்டுகளுக்கு உபிஸ்லேட் 7+ மற்றும் உபிஸ்லேட் 7சி என்ற பெயர்களை சூட்டியிருக்கிறது. 7சி டேப்லெட் இன்னொரு ஆகாஷ் II டேப்லெட் என்று கருதப்படுகிறது. இந்த 7சி டேப்லெட்டின் விலை ரூ.3999 ஆகும். அதுபோல் 7+ டேப்லெட்டின் விலை ரூ.2999 ஆகும்.

இரண்டு டேப்லெட்டுகளுமே மாணவர்களை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நாட்டில் உள்ள தகவல் தொடர்பை இணைக்கும் பாலமாக இந்த டேப்லெட் இருக்கும் என்று டேட்டா விண்ட் கருதுகிறது.

இந்த இரண்டு டேப்லெட்டுகளுமே கல்விக்கான அப்ளிகேசன்களையும் மற்றும் சிபிஎஸ்இ பாடப்புத்தகங்களையும் உள்ளடக்கி வருகின்றன. அதுபோல விக்கிபீடியா அப்ளிகேசன்களையும் இந்த டேப்லெட்டுகள் கொண்டு வருகின்றன.

இரண்டுமே தரமான 7 இன்ச் டிஸ்ப்ளேயுடன் வருகின்றன. மேலும் 7சி டேப்லெட் சிம் வசதியும் கொண்டு வருகிறது. அதனால் இதில் கால் செய்ய முடியும். டேட்டா விண்டின் தலைமை இயக்குனர் சுனித் சிங் டுலி கூறும் போது ஐபேடில் கூட கால் செய்ய முடியாது. அதுபோல் எந்த ஒரு 7 இன்ச் ஆன்ட்ராய்டு போனும் இந்த டேட்டா விண்ட் டேப்லெட்டுகளைப் போல குறைந்த விலையில் வராது என்று கூறி இருக்கிறார்.

7சி டேப்லெட் ஆன்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர் ப்ரீடு இயங்கு தளத்தில் இயங்குகிறது. விரைவில் அந்த டேப்லெட் ஐஸ்க்ரீம் சான்ட்விஜ்ஜிற்கு தாவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த கேமராவில் கேமரா இல்லை. ஆனாலும் அது ஒரு பெரிய குறையாக இருக்காது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X