குறைந்த விலையில் தோஷிபாவின் 2 புதிய லேப்டாப்புகள்!

By Karthikeyan
|
குறைந்த விலையில் தோஷிபாவின் 2 புதிய லேப்டாப்புகள்!

தோஷிபா போன்ற பெரிய நிறுவனங்களின் லேப்டாப்புகளுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. நெடுங்காலமாக இந்திய சந்தையில் தோஷிபா பீடுநடை போட்டு வருகிறது. அந்த வரிசையில் இப்போது தோஷிபா நிறுவனம் 2 புதிய லேப்டாப்புகளை களமிறக்க இருக்கிறது. இந்த 2 லேப்டாப்புகளும் தோஷிபாவின் ஸ்பார்க்ளிங் சேட்டிலைட் வரிசை லேப்டாப்புகளின் கீழ் வருகின்றன.

இந்த ஸ்பார்க்ளிங் வரிசை லேப்டாப்புகள் சொகுசு லேப்டாப்புகள் ஆகும். இவை பல வண்ணங்களில் வருகின்றன. தோஷிபாவின் இந்த புதிய ஸ்பார்க்ளிங் லேப்டாப்புகளின் பெயர்கள் எல்740 மற்றும் எல்750 ஆகும். இந்த லேப்டாப்புகளின் முக்கிய அம்சம் என்னவென்றால் இவை குறைந்த விலையில் வருகின்றன.

இந்த இரண்டு லேப்டாப்புகளும் கருப்பு, மரூன் ப்ரவுன் மற்றும் க்ரேஸ் சில்வர் போன்ற 3 நிறங்களில் வருகின்றன. இவை சிறந்த கீபோர்டுகளையும் அதுபோல் மல்டி டச் வசதி கொண்ட டச்பேடுகளையும் கொண்டுள்ளன. இவற்றின் செயல் திறனும் மிக அற்புதமாக இருக்கும்.

இந்த எல்740 மற்றும் எல்750 லேப்டாப்புகள் அதிவேகம் கொண்ட ரேமைக் கொண்டுள்ளன. இந்த ரேமை 8ஜிபி வரை அதிகரிக்க முடியும். அதேபோல் மிகவும் சக்தி வாய்ந்த இன்டல் ப்ராசஸர்களையும் இந்த லேப்டாப்புகள் கொண்டுள்ளன. மேலும் இதில் தனியாக சிறந்த க்ரீபிக்ஸ்அக்சிலரேட்டிங் யூனிட்டும் உள்ளது. அதுபோல் சேமிப்பு வசதிக்காக மிக பெரிய அளவில் 750 ஜிபி சட்டா ஹார்ட் ட்ரைவுகளைக் கொண்டுள்ளன.

இந்த இரண்டு லேப்டாப்புகளுக்கும் உள்ள சிறிய வித்தியாசம் என்னவென்றால் எல்740 லேப்டாப் 14 இன்ச் திரையைக் கொண்டுள்ளது. ஆனால் எல்750 லேப்டாப் 15.6 இன்ச் திரையைக் கொண்டுள்ளது. மேலும் இவற்றின் டிஸ்ப்ளேயில் தோஷிபாவின் க்ளியர் சூப்பர் வியூவ் எல்இடி தொழில் நுட்பம் உள்ளதால் இந்த லேப்டாப்புகள் மிகத் தெளிவான காட்சிகளை மற்றும் படங்களை கொடுக்கும்.

மேலும் சிறந்த ஒலி அமைப்பு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த லேப்டாப்புகளில் உள்ளன. அதுபோல் முகமுகமாக வீடியோ உரையாடல் செய்ய வெப்காமும் உள்ளது. ஏறக்குறைய தோஷிபாவின் ஸ்பார்க்ளிங் வரிசையில் 14 லேப்டாப்புகள் உள்ளன. இவற்றின் விலை ரூ.24,000லிருந்து தொடங்குகின்றன.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X