Home
Computer

பிஜிட்சூ வழங்கும் இரண்டு புதிய லேப்டாப்புகள்!

By Karthikeyan
பிஜிட்சூ வழங்கும் இரண்டு புதிய லேப்டாப்புகள்!

சமீபத்தில பிஜிட்சு நிறுவனம் இரண்டு புதிய லைப்புக் மாடல்களைக் களமிறக்கி இருக்கிறது. இந்த இரண்டு லேப்டாப்புகளும் இன்டலின் ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர்களைக் கொண்டிருக்கின்றன. இந்த லேப்டாப்புகளுக்கு லைப்புக் எல்எச்532 மற்றும் லைப்புக் எல்எச்772 ஆகிய பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன.

லைப்புக் எல்எச்532 லேப்டாப் பிஜிட்சுவின் பழைய லேப்டாப்பின் தொடர்ச்சியாக பல புதிய வசதிகளுடன் வருகிறது. ஆனால் லைப்புக் எல்எச்772 முற்றிலும் ஒரு புதிய மற்றும் புதுமையான லேப்டாப்பாகும். நோட்புக் சந்தையில் இந்த லேப்டாப்புகள் ஒரு பெரிய சாதனையைப் படைக்கும் என்று நம்பப்படுகிறது.

லைப்புக் எல்எச்532 லேப்டாப் 1366x768 பிக்சல் ரிசலூசனுடன் கூடிய 14 இன்ச் டிஸ்ப்ளே, 3ஜி கோர் ஐ7 சிபியு, 2ஜிபி மெமரி, என்விடியா ஜிஇபோர்ஸ் ஜிடி620எம் க்ராபிக்ஸ் மற்றும் 2ஜிபி வீடியோ ரேம் ஆகிய வசதிகளுடன் வருகிறது.

இந்த லேப்டாப்பில் மல்டிமீடியா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் மக சிறப்பாக இருக்கும். மேலும் இந்த லேப்டாப் மிக உறுதியாக இருப்பதால் இதன் வேகமும் மிக அதிகமாக இருக்கும்.

அடுத்ததாக லைப்புக் எல்எச்772 லேப்டாப் 14 இன்ச் திரையுடன் வருகிறது. ஆனால் இதன் சிபியு ஐவி பிரிட்ஜ் ஐ7 ஆகும். மேலும் என்விடியா 28ஜிபி ஆப்டிமஸ் க்ராபிக்ஸ், 4ஜிபி ரேம், ஓங்கியோ பாக்ஸ் ஸ்பீக்கர்கள், டிடிஎஸ் அல்ட்ரா பிசி II ப்ளஸ் மற்றும் கைரேகை சென்சார் ஆகிய புதுமையான தொழில் நுட்பங்களுடன் வருகிறது.

இந்த லேப்டாப்பில் ஒரு சல்லடை உள்ளதால் இதில் படியும் தூசுகளை மிக எளிதாக சுத்தம் செய்ய முடியும். இது ஒரு ஆடம்பர லேப்டாப் ஆகும். பொழுதுபோக்கிற்கும் இது ஒரு சிறந்த லேப்டாப் ஆகும். இந்த லேப்டாப் அர்பன் வெள்ளை, ஷைனி கருப்பு மற்றும் காஸ்மோஸ் பிங் ஆகிய நிறங்களில் வருகிறது.

மேற்சொன்ன இரண்டு லேப்டாப்புகளும் முகத்தை அறியும் தன்மை கொண்டது. அதன் மூலம் இது இயக்கத்தில் இருக்கும் போது இயக்குபவர் இல்லை என்றால் இது தானாகவே நின்றுவிடும்.

சூப்பாரன நவீன வசதிகளுடன் வரும் இந்த டேப்லெட்டுகள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவற்றின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X