Home
Computer

எச்பி களமிறக்கும் புதிய என்வி வரிசை லேப்டாப்புகள்!

By Karthikeyan
எச்பி களமிறக்கும் புதிய என்வி வரிசை லேப்டாப்புகள்!

எச்பி நிறுவனம் இரண்டு புதிய அல்ட்ராபுக் நோட்புக்குகளை அறிமுகம் செய்யத் தயாராக இருக்கிறது. இந்த புதிய நோட்புக்குகளுக்கு எச்பி என்வி 4 மற்றும் எச்பி என்வி 6 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இவை எச்பியின் ப்ரீமியம் என்வி லேப்டாப்புகளாகும்.

என்வி 6 லேப்டாப் 15.6 இன்ச் டிஸ்ப்ளேயுடன் ஏராளமான தொழில் நுட்பங்களுடன் வருகிறது. குறிப்பாக இந்த லேப்டாப்பில் ஜிகாபிட் எர்த்நெட் லேன், 32ஜிபி எம்சட்டா சாலிட் ஸ்டேட் சேமிப்பு, 4 செல் லித்தியம் பாலிமர் பேட்டரி, 500ஜிபி 5400 ஆர்பிஎம் ஸ்பின்னிங் ஹார்ட் ட்ரைவ், 8ஜிபியுடன் கூடிய 1333 மெகா ஹெர்ட்ஸ் டிடிஆர்3 ரேம், எஎம்டி ரேடியோன் எச்டி டிஸ்க்ரீட் க்ராபிக்ஸ் ஆகியவை இருக்கிறது.

2 பீட்ஸ் ஆடியோ ஸ்பீக்கர்கள், ப்ளூடூத், யுஎஸ்பி இணைப்பு, டூவல் கோர் 1.6 ஜிஹெர்ட்ஸ் இன்டல்கோர் ஐ5-2467எம் சான்டி பிரிட்ஜ் ப்ராசஸர், எச்பி ப்ரைட் வியூவ் எல்இடி பேக்லிட் ட்ஸ்ப்ளே, எச்பி ட்ரூவிஷன் எச்டி வெப்காம் மற்றும் எச்டிஎம்ஐ போர்ட் போன்ற எல்லா அம்சங்களுடனும் வருகிறது.

இதன் இயங்கு வேகமும் அதிரடியாக இருக்கும். மேலும் இணைப்பு வசதிகளும் இந்த லேப்டாப்பில் சூப்பராக இருக்கிறது. குறிப்பாக க்ராபிக்ஸ் வேலைகளையும் இதில் நன்றாக செய்ய முடியும்.

அடுத்ததாக என்வி 4 லேப்டாப் 14 இன்ச் டிஸ்ப்ளேயுடன் வருகிறது. இதன் முக்கிய தொழில் நுட்பங்கள் பற்றி அதிகமான தகவல்கள் வரவில்லை என்றாலும் என்வி 6 லேப்டப்பின் அத்தனை அம்சங்களையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக மொபைல் என்டர்டைன்மென்ட் மெசினை விரும்புவோர் என்வி 6 லேப்டாப்பை தேர்ந்தெடுக்கலாம். இந்த இரண்டு லேப்டாப்புகளின் விலையும் மற்றும் விற்பனைக்கு வரும் தேதியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் விரைவில் வரும் என்று நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X