ஸ்டோரேஜ் ஆப்சன்ஸ் களமிறக்கும் புதிய டேப்லெட்டுகள்!

ஸ்டோரேஜ் ஆப்சன்ஸ் நிறுவனம் சமீபத்தில் இரண்டு ஆண்ட்ராய்டு டேப்லெட்டுகளை இங்கிலாந்து டேப்லெட் சந்தையி்ல களமிறக்கி இருக்கிறது. இந்த இரண்டு டேப்லெட்டுகளும் ஐஸ்க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தில் இயங்குகின்றன.
இந்த இரண்டு டேப்லெட்டுகளுக்கும் ஸ்க்ரோல் என்கேஜ் மற்றும் ஸ்க்ரோல் எலைட் என்ற பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. ஸ்க்ரோல் என்கேஜ் 8 இன்ச் அளவும் ஸ்க்ரோல் எலைட் 9.7 இன்ச் அளவும் கொண்டிருக்கின்றன.
இந்த இரண்டு டேப்லெட்டுகளும் மலிவு விலையி்ல் வருகின்றன. ஸ்க்ரோல் இன்ச் டேப்லெட் கோர்ட்டெக்ஸ் எ8 ப்ர்சஸரைக் கொண்டிருக்கிறது. இது 1.2 ஜிஹெர்ட்ஸ் கடிகார வேகத்தி்ல் இயங்குகிறது. இதன் ரிசலூசனும் பக்காவாக இருக்கிறது. க்ராபிக்ஸ் வசதிக்காக இந்த டேப்லெட் டூவல் கோர் மாலி 400 க்ராபிக்ஸைக் கொண்டிருக்கிறது. அதோடு இதில் 1 ஜிபி ரேமும் உண்டு.
இந்த டேப்லெட் பலவகையான இபுக் மற்றும் வீடியோ பார்மட்டுகள் மற்றும் 3டி விளையாட்டுகள் ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது. இதன் விலை ரூ.10,000 ஆகும்.
அதே நேரத்தி்ல ஸ்க்ரோல் எலைட் டேப்லெட் 16ஜிபி சேமிப்பு வசதியுடன் வருகிறது. ஸ்க்ரோல் என்கேஜில் உள்ள அத்தனை அம்சங்களும் இந்த டேப்லெட்டில் உண்டு. இதன் விலை ரூ.15,000 ஆகும்.


Click it and Unblock the Notifications