Home
Computer

சந்தையைக் கலங்கடிக்க வரும் புதிய தோஷிபா டேப்லெட்!

By Karthikeyan
சந்தையைக் கலங்கடிக்க வரும் புதிய தோஷிபா டேப்லெட்!

தோஷிபா தனது புதிய டேப்லெட்டுகள் மூலம் டேப்லெட் சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. லேப்டாப் மற்றும் நோட்புக் துறையில் தோஷிபாவின் தொழில் நுட்பங்கள் மக்களால் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. அதுபோல் டேப்லெட் துறையிலும் தோஷிபா ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளது.

தற்போது தோஷிபா மிகவும் மெல்லிய டிசைனைக் கொண்ட ஒரு புதிய டேப்லெட்டை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த புதிய டேப்லெட்டின் பெயர் தோஷிபா எக்ஸைட் எக்ஸ்10 ஆகும். இது பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கிறது.

இந்த எக்ஸைட் டேப்லெட்டின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இதன் டிஸ்ப்ளே 10.1 இன்ச் அளவு கொண்டு 1280 x 800 பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது. மேலும் இந்த திரை மல்டி டச் வசித கொண்டு ஐபிஎஸ் வசதியையும் வழங்குகிறது. இதன் கேமராவைப் பொருத்தவரை 2592 x 1944 பிக்சல் மற்றும் ஆட்டோ போக்கஸ் கொண்ட 5 எம்பி முக்கிய கேமராவைக் கொண்டிருக்கிறது. அதற்குத் துணையாக 2 மெகா பிக்சல் கொண்ட முகப்பு கேமராவும் இந்த டேப்லெட்டில் உண்டு. அதுபோல் இதில் வீடியோ வசதியும் உண்டு.

அடுத்ததாக இந்த டேப்லெட் 32ஜிபி வரை விரிவுபடுத்தக்கூடிய மெமரியைக் கொண்டுள்ளது. அதற்காக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த டேப்லெட் இணைப்பு வசதிக்காகவும் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்காகவும் ஏராளமான இணைப்பு வசதிகளை வழங்குகிறது.

இதில் க்ளாஸ் 12 ஜிபிஆர்எஸ் மற்றும் க்ளாஸ் 12 எட்ஜ் வசதி உள்ளது. அதுபோல் 3ஜி எச்எஸ்டிபிஎ, 7.2 எம்பிபிஎஸ் கொண்ட டபுள்யுலேன், வைபை 802.11, எ2டிபியுடன் கூடிய ப்ளூடூத் வி2.0 போன்ற வசதிகளை இந்த டேப்லெட் வழங்குகிறது. ஆனால் இன்ப்ரேர்டு போர்ட் இதில் இல்லை.

மேலும் இந்த எக்ஸைட் டேப்லெட்டில் உள்ள இதர அம்சங்களைப் பார்த்தால் இது யுஎஸ்பி வி2.0, மைக்ரோ யூஎஸ்பி மற்றும் ஜிபிஎஸ் வசதியைக் கொடுக்கிறது. அதுபோல் 3ஜி நெட்வொர்க் எச்எஸ்டிபிஎ 900/1900/2100யும் சப்போர்ட் செய்கிறது. பொழுதுபோக்கு அம்சங்களுக்காக இந்த டேப்லெட் ஆடியோ ப்ளேயர், எம்பி3, டபுள்யுஎவி, 3.5 மிமீ ஜாக், ஒலி பெருக்கி, வீடியோ ப்ளேயர் மற்றும் கேம்களும் உள்ளன. அதனால் இந்த டேப்லெட் இருந்தால் பொழுது போவதே தெரியாது.

எக்ஸைட் டேப்லெட்டின் மொத்த அளவு 10.08 x 6.93 x 0.3 இன்ச் ஆகும். இதன் மொத்த எடை 557 கிராம்கள் மட்டுமே. இந்த டேப்லெட் டபுள்யுபி பிரவுசர் கொண்டுள்ளது. அடுத்ததாக இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு வி3.2 ஹனிகோம்ப் இயங்குதளம் பெற்றுள்ளது. அதோது 1.2 ஜிஹெர்ட்ஸ் டூவல் கோர் டிஐ ஒஎம்பி 4430 ப்ராசஸர் கொண்டு சிபியுவை இந்த டேப்லட் கொண்டிருக்கிறது.

இந்த எக்ஸைட் டேப்லெட் எச்டிஎம்ஐ போர்ட்டுகளும் மற்றும் யுஎஸ்பி போர்ட்டும் உள்ளன. இதன் ஒலி பெருக்கியில் எஸ்ஆர்எஸ் ஆடியோ தொழில் நுட்பம் உள்ளதால் அவற்றில் இருந்து வரும் இசை மிக அற்புதமாக இருக்கும். இந்த டேப்லெட்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X