ஐவிபிரிட்ஜ் பிராசஸருடன் வரும் புதிய தோஷிபா லேப்டாப்!

சமீபத்தில் தோஷிபா நிறுவனம் ஒரு புதிய லேப்டாப்பை களமிறக்கி இருக்கிறது. கலக்கலான டிசைனுடன் வரும் இந்த டேப்லேட் ஐவி பிரிட்ஜ் ப்ராசஸருடன் களமிறங்குகிறது. இந்த புதிய டேப்லெட்டிற்கு தோஷிபா யு840 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
ஒன்றரைக் கிலோ எடையுடன் வரும் இந்த லேப்டாப் பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கிறது. அதோடு இதில் ஏராளமான தொழில் நுட்ப வசதிகளும் உள்ளன. குறிப்பாக இது ஐவி பிரிட்ஜ் ஐ5-3317யு ப்ராசஸர் கொண்டிருப்பதால் இதன் கடிகார வேகம் 1.7 ஜிஹெர்ட்ஸ் ஆகும். இணைப்பு வசதிகளுக்காக இந்த லேப்டாப் எச்டிஎம்ஐ, யுஎஸ்பி, எஸ்டி கார்ட், லேன் ஜாக், மைக்ரோபோன் மற்றும் ஹெட்போன் ஜாக் போன்ற வசதிகளையும் தனது ரசிகர்களுக்கு வழங்குகிறது.
இந்த லேப்டாப் பேக்லிட் சிக்லேட் கீபோர்டு கொண்டிருப்பதால் இருட்டான இடங்களிலும் இந்த லேப்டாப்பில் தடையில்லாமல் வேலை செய்யலாம். அதோடு இதன் தொடுதளம் அகலமாக இருப்பதால் இதில் வேலை செய்வது மிக எளிதாக இருக்கும்.
இந்த தோஷிபா லேப்டாப் 4ஜிபி ரேமுடன் வருகிறது. இந்த ரேமின் அளவை 8ஜிபியாக அதிகரிக்கவும் முடியும். அதோடு இதன் ஹார்ட் ட்ரைவ் 500 ஜிபி சேமிப்பைக் கொண்டுள்ளது. மேலும் இந்த லேப்டாப்பில் எச்டி 4000 இன்டல் க்ராபிக்ஸ் உள்ளதால் எச்டி வீடியோவை இதில் அனுபவித்து பார்க்கலாம்.
இந்த புதிய லேப்டாப்பின் 14 இன்ச் அளவுள்ள எல்இடி பேக்லிட் திரை மிகத் துல்லியமாக உள்ளது. மேலும் இந்த லேப்டாப் இயற்கையோடு ஒத்துப் போகும் வசதி கொண்டது. அதோடு இதன் பேட்டரி இந்த லேப்டாப்பிற்கு 6 முதல் 8 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது.
இத்தனை சிறப்புகளுடன் வந்திருக்கும் இந்த புதிய லேப்டாப் ரூ.54,000க்கு விற்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications