Home
Computer

தோஷிபா எக்ஸைட்... உலகின் மிக மெல்லிய டேப்லெட்!

By Super

தோஷிபா எக்ஸைட்... உலகின் மிக மெல்லிய டேப்லெட்!
மெல்லிய டேப்லெட்டுகள் இப்போது சந்தைக்கு படையெடுத்து வருகின்றன. அவை மிகவும் ஸ்டைலாகவும் அதே நேரத்தில் நவீன தொழில் நுட்பங்களும் கொண்டு வருகின்றன.

அந்த வரிசையில் இப்போது தோஷிபா நிறுவனம் தற்போது தோஷிபா எக்ஸைட் என்ற புதிய மெல்லிய டேப்லெட்டை வரும் ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த புதிய டேப்லெட் உலகின் மிக மெல்லிய டேப்லட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தோஷிபா எக்ஸைட்டின் சிறப்புகளைப் பார்த்தால் அது அல்ட்ரா காம்பெக்ட்டாக மிகக் குறைந்த எடையுடன் வருகிறது. இதன் திரை 10.1 இன்ச் ஆகும். அதுபோல் 2 கேமராக்களைக் கொண்டு வருகிறது. மேலும் எச்டிஎம்ஐ போர்ட்டுகளுடன், இது ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தையும் கொண்டிருக்கிறது.

தோஷிபா எக்ஸைட் டேப்லெட்டின் பரப்பு 10.08 மிமீ x 6.93 மிமீ x 0.30 மிமீ ஆகும். இதன் எடை 558 கிராம் மட்டுமே. எனவே, இதை மிக எளிதாக எடுத்துச் செல்ல முடியும்.

இந்த டேப்லெட்டின் டிஸ்ப்ளே கெப்பாசிட்டிவ் வகையைச் சேர்ந்த்து. இதன் திரையின் ரிசலூசன் 1280 x 800 பிக்சல் ஆகும். இதில் லைட் சென்சார் உள்ளதால் இதன் திரை மிகவும் பளிச் என்று இருக்கும். இதன் முக்கிய கேமார 5 மெகா பிக்சலையும் அதே நேரத்தில் இதன் உச்சியில் இருக்கும் கேமரா 2 மெகா பிக்சலையும் கொண்டிருக்கிறது. உச்சி கேமரா மூலம் வீடியோ கால் வசதியை மிகவும் நன்றாகப் பயன்படுத்த முடியும்.

தோஷிபா எச்ஸைட்டின் பிராசஸர் டிஐ ஒஎம்எபி 4430 ஆகும். இந்த பிராசஸர் 1200 எம்ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. இந்த டேப்லெட்டின் மொத்த மெமரி 1024 எம்பி ஆகும். மேலும் இந்த டேப்லெட் 16 ஜிபி மற்றும் 32 ஜிபி ஆகிய 2 இன்டர்னல் மெமரி அளவுகளைக் கொண்டுள்ளது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் இந்த எக்ஸ்டர்னல் மெமரியை விரவுபடுத்த முடியும்.

நாம் ஏற்கனவெ கூறியதுபோல் இது ஆன்ட்ராய்டு 3.2 ஹனிகோம்ப் இயங்கு தளத்தைக் கொண்டுள்ளது. வைஃபை வசதி கொண்ட யுஎஸ்பி இணைப்பையும் இந்த டேப்லெட் வழங்குகிறது.

மேலும் இது மைக்ரோ யுஎஸ்பி வகையைச் சேர்ந்த யுஎஸ்பி கனெக்டெரைக் கொண்டுள்ளது. அதுபோல் ப்ளூடூத் வசதியும் இதில் அபாரமாக உள்ளதால் இதில் தகவல் பரிமாற்றம் செய்வது மிகவும் எளிதாக இருக்கும். தோஷிபா எக்ஸைட்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. வரும் ஜனவரியில் இது சந்தைக்கு வந்துவிடும் என நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X