Home
Computer

எச்டி மற்றும் 3டியில் பரவசம்: புதிய தோஷிபா சேட்டிலைட் பி750

By Super
எச்டி மற்றும் 3டியில் பரவசம்: புதிய தோஷிபா சேட்டிலைட் பி750
தரம் வாய்ந்த எச்டி மற்றும் 3டி வசதி கொண்ட லேப்டாப்புக்காக காத்திருந்தால் தோஷிபா சேட்டிலைட் பி750 லேப்டாப்பைத் தேர்ந்தெடுக்கலாம். ஆம். தோஷிபா சேட்டிலைட் பி750 எல்லா வகையிலும் சிறப்பாக வந்திருக்கிறது.

அதன் மல்டிமீடியாவாக இருந்தாலும் சரி. அல்லது அதன் பேட்டரியாக இருந்தாலும் சரி. மிகவும் பக்காவகா இருக்கிறது. இந்த தோஷிபா சேட்டிலைட் பி750 2ஜி இன்டல் கோர் ஐ7 மற்றும் 2630க்யூஎம் (2ஜிஹெர்ட்ஸ்) கொண்டு இருக்கிறது.

அதுபோல் இது என்விடியா ஜிஇபோர்ஸ் ஜிடி 540எம் கொண்டுள்ளது. இதன் என்விடியா க்ராபிக்ஸ் கார்டு மூலம் இது அம்சமான வீடியோ கேமை வழங்கும். மேலும் இது திரை ரிசலூசனை மெருகூட்டும்.

இதன் டிஸ்ப்ளே 15.6 இன்ச் டயக்கோனல் ஆகும். அதனால் இதில் படங்களும் வீடியோவும் மிகத் தெளிவாக இருக்கும். மேலும் இதில் 3டி வசதி உள்ளதால் படம் பார்ப்பதற்கும் அதுபோல் வீடியோ கேம் விளையாடுவதற்கும் மிக அருமையாக இருக்கும்.

மேலும் இந்த லேப்டாப்பை மிக எளிதாக டிவியோடு இணைக்க முடியும். அதனால் லைபவ் டிவியை ரிக்கார்ட் செய்யவும் முடியும்.

தோஷிபா சேட்டிலைட் பி750 பொழுதுபோக்கு அம்சங்களில் மட்டும் அல்ல. அதன் சேமிப்பு வசதியும் பக்காவாக உள்ளது. அதாவது இதன் சேமிப்பு வசதி 750ஜிபி ஆகும்.

மேலும் இது ஸ்லீப் மற்றும் மீயூசிக் வசதியையும் அளிக்கிறது. அதனால் லேப்டாப் ஆப் நிலையில் இருந்தாலும் இதில் நாம் எம்பி 3 ப்ளேயரை இயக்க முடியும். இதன் ஸ்பீக்கர்களும் தரமான இசையை வழங்குகின்றன.

தோஷிபா சேட்டிலைட் பி750 6 செல் பேட்டரி கொண்டிருப்பதால் இதன் மின் திறனும் மிகப் பக்காவாக இருக்கும்.

தோஷிபா சேட்டிலைட் பி750, 2.6கிலோ எடையைக் கொண்டிருப்பதால் இதை எடுத்துச் செல்வதற்கு சற்று சிரமமாகத் தோன்றலாம்.

ஆனால் இதை எடுத்துச் செல்வதற்கு எளிதாக இருக்கும். இதன் கீபேடும் மிக அழகாக உள்ளது. இதிலிருக்கும் 8X டிவிடி ரைட்டர், 1.3 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் வைபை ஆகியவை இந்த லேப்டாப்புக்கு இன்னும் சிறப்பைக் கொடுக்கின்றன.

தோஷிபா சேட்டிலைட் பி750 ஓர் ஆண்டு உத்திரவாதத்துடன் ரூ.40,000க்கு கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X