புதிய லேப்டாப்பை பற்றி மூச்சு விடாத தோஷிபா!

By Karthikeyan
|

புதிய லேப்டாப்பை பற்றி மூச்சு விடாத தோஷிபா!
சமீபத்தில் தோஷிபான தனது புதிய கோஸ்மியோ எக்ஸ்870 என்ற லேப்டாப்பை அறிமுகம் செய்த வைத்தது. ஆனால் அதற்கு பின்பு அந்த லேப்டாப்பை பற்றி தோஷிபா வாய் திறக்க மறுக்கிறது. அதன் மூலம் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க நினைக்கிறது தோஷிபா.

இந்த புதிய கோஸ்மியோ டேப்லெட் பல முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக இதன் 17.3 இன்ச் டிஸ்ப்ளே 1920 x 1080 பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது. மேலும் இந்த டிஸ்ப்ளே ட்ரூப்ரைட் முழு உயர் டெபினிசன் மற்றும் எல்இடி வசதியைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே 3டி வசதியையும் சப்போர்ட் செய்யும்.

அடுத்ததாக இந்த லேப்டாப் முகத்தை அறியும் எடி வெப் கேமராவையும், என்விடியாவின் க்ராபிக்ஸ் ப்ராசஸரையும் கொண்டுள்ளது. இந்த லேப்டாப்பின் உள்சேமிப்பு 2 டிபி ஆகும். அதுபோல் இதில் எச்டிடி அல்லது ஹைப்ரிட் ட்ரைவ் சேமிப்பு வசதியும் உள்ளது.

இணைப்பு வசதிகளுக்காக இந்த லேப்டாப்பில் யுஎஸ்பி 3.0 போர்ட்டுகள், எச்டிஎம்ஐ, வைபை, ப்ளூடூத் 4.0 மற்றும் ஆப்டிக்கல் ட்ரைவ் போன்ற வசதிகள் உள்ளன. மேலும் இந்த லேப்டாப்பில் ஹர்மான் கர்டோன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளதால் இதன் ஒலி அமைப்பும் பக்காவாக இருக்கும்.

இந்த புதிய லேப்டாப் மற்ற சாதாரண லேப்டாப்பைப் போலவே இருக்கும். ஆனால் அதைத் தவிர்த்து இந்த லேப்டாப் ஒரு கேமிங் லேப்டாப்பாக இருக்கும். இதன் கீபோர்டு மிக பக்காவாக உள்ளது. அதுபோல் இதன் தொடுதளமும் மிக அருமையாக உள்ளது.

இந்த புதிய கோஸ்மியோ லேப்டாப்பின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த ஆண்டின் மத்தியில் இந்த லேப்டாப் விற்பனைக்கு வரும் என்று நம்பலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X