தோஷிபா போர்ட்டேஜ், ஆசஸ் ஸென்புக் லேப்டாப்: எது பெஸ்ட்?

Posted By: Staff
தோஷிபா போர்ட்டேஜ், ஆசஸ் ஸென்புக் லேப்டாப்: எது பெஸ்ட்?
மிகவும் எடை குறைந்த மெல்லிய லேப்டாப்புகளை வழங்குவதில் தோஷிபாவிற்கு நிகர் தோஷிபாவேதான். ஆம், தற்போது தோஷிபா நிறுவனம் புதுமையும் புதுமையான சிந்தனையும் கொண்டு எடை குறைந்த தோஷிபா போர்ட்டேஜ் இஸட்835 - பி330 என்ற லேப்டாப்பை களமிறக்குகிறது.

அதே நேரத்தில் ஆசஸ் நிறுவனமும் மிகவும் மெல்லிய ஆசஸ் ஸென்புக் யுஎக்ஸ்31 - ஆர்எஸ்எல்8 என்ற புதிய டேப்லெட்டை களமிறக்குகிறது. இந்த லேப்டாப் பார்ப்பதற்கு சூப்பராக இருக்கிறது. இதன் மேல் ஆசஸின் முத்திரை இருக்கிறது.

இதை ஒரு பொழுதுபோக்கு லேப்டாப் என்று அழைக்கலாம். ஏனெனில் இதில் அதிகமான பொழுதுபோக்கு அம்சங்களும் மற்றும் பேங் மற்றும் அலுப்ஸென் ஸ்பீக்கர்களும் உள்ளன.

தோஷிபா போர்ட்டேஜ் ஸட்835 - பி330 என்ற லேப்டாப்பின் சிறப்புகளைப் பார்த்தால் இது காம்பெக்ட்டாக இருக்கிறது. இதன் பேட்டரி நீண்ட ஆயுளை வழங்குகிறது. இதன் பேக்லிட் கீபோர்டு மிகவும் அம்சமாக இருக்கிறது. இதன் பேட்டரி 8 மணி நேர இயங்கு நேரத்தை வழங்கும்.

மேலும் யுஎஸ்பி 2.0 மற்றும் 3.0 போர்ட்டுகள், ஜிகாபிட் எர்த்நெட் மற்றும் எச்டிஎம்ஐ போன்ற அனைத்து வசதிகளும் இந்த லேப்டாப்பில் உள்ளன. இதன் எடை 2.47 பவுண்டுகளாகும். இதன் விலை ரூ.48,000 ஆகும்.

ஆசஸ் ஸென்புக் யுஎக்ஸ்31 - ஆர்எஸ்எல்8 லேப்டாப் யுஎஸ்பி 2.0 போர்ட், யுஎஸ்பி 3.0 சாக்கெட், யுஎஸ்பியிலிருந்து எர்த்நெட்டுக்கு இணைப்பு வசதி, விஜிஏவிலிருந்து விஜிஏவிற்கு இணைப்பு வசதி மற்றும் எஸ்டி எம்எம்எசி கார்டு ரீடர் போன்ற வசதிகளையும் வழங்குகின்றது. ஆனால் தோஷிபா மற்றும் பிற விண்டோஸ் அல்ட்ரா புக்குகளைப்போல் இதல் முழு அளவு எச்டிஎம்ஐ போர்ட் இல்லை.

தோஷிபா போர்ட்டேஜ் லேப்டாப்பை பார்த்தால் அது இன்டல் கோர் ஐ3-236எம் 1.4ஜி ஹெர்ட்ஸ் பிராசஸர் கொண்டுள்ளது. அதுபோல் 128ஜிபி எஸ்எஸ்டி மற்றும் 4ஜிபி ரேம் கொண்டுள்ளது. ஆனால் ஆசஸ் சென்புக் இன்டல் கோர் ஐ5-2557எம் 1.7 ஜி ஹெர்ட்ஸ் பிராசஸருடன் 4ஜிபி ரேம் மற்றும் எடிஎடிஎ 128 ஜிபி சாலிட் ஸ்டேட் சேன்ட் போர்ஸ் எஸ்எப்22811 டிரைவைக் கொண்டுள்ளது.

செயல்திறனைப் பொருத்தவரை தோஷிபாவை விட ஆசஸ் லேப்டாப் சற்று அதிகமாக உள்ளது. ஆனால் ஆசஸ் லேப்டாப்பின் விலை தோஷிபாவை விட அதிகம். அதாவது இதன் விலை ரூ.80,000 முதல் ரூ.90,000க்குள் இருக்கும்.

இந்த 2 லேப்டாப்புகளுமே மிக குறைந்த தடிமன் கொண்ட மெல்லிய லேப்டாப்புகளாகும். கிராபிக்ஸ் வேலைகளுக்கு ஆசஸ் லேப்டாப் மிகச் சிறந்ததாக இருக்கும். ஆனால் தோஷிபா லேப்டாப் கண்டிப்பாக வாடிக்கையாளர்களைத் திருப்தி படுத்தும் வகையி்ல் இருக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்