முதல் சினிமாட்டிக் அல்ட்ராபுக்கைக் களமிறக்கும் தோஷிபா!

Posted By: Karthikeyan
முதல் சினிமாட்டிக் அல்ட்ராபுக்கைக் களமிறக்கும் தோஷிபா!

தோஷிபா ஒரு புதிய சூப்பரான அல்ட்ராபுக்கைக் களமிறக்கி இருக்கிறது. இந்த அல்ட்ராபுக்கிற்கு சேட்டிலைட் யு840டபுள்யு என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த சாதனம்தான் உலகிலேயே 21:9 சினிமாடிக் டிஸ்ப்ளேயுடன் வரும் முதல் அல்ட்ராபுக் என்று தோஷிபா கருதுகிறது.

குறிப்பாக சினிமா ஆர்வலர்களுக்காகவே இந்த அல்ட்ராபுக் உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதில் படம் பார்க்கும் போது எந்தவிதமான கோடுகளும், புள்ளிகளும் இதன் டிஸ்ப்ளேயில் இருக்காது.

இந்த அல்ட்ராபுக் 14.4 இன்ச் அளவில் உயர் டெபினிசன் கொண்ட கிளியர் சூப்பர் வியூவ் எல்இடி பேக்லிட் டிஸ்ப்ளேயுடன் வருகிறது. இந்த அல்ட்ராபுக் ரூ.63,500க்கு விற்கப்பட இருக்கிறது. இதில் படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகத் துல்லியமாக மற்றும் தெளிவாக இருக்கும்.

இதன் எல்இடி பேக்லைட் டிஸ்ப்ளேயில் வண்ணக் கலவைகளும் அருமையாக இருக்கும். இந்த அல்ட்ராபுக் ஒரு சூப்பரான எல்இடி பேக்லிட் டைல் கீபோர்டைக் கொண்டிருக்கிறது.

மேற்சொன்ன அல்ட்ராபுக்கைத் தவிர்த்து தோஷிபா ஒரு ஆல் இன் ஒன் பிசியையும் களமிறக்கி இருக்கிறது. இந்த சாதனத்திற்கு எல்எக்ஸ்830 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த கணினி இன்டல் கோர் ஐ5-321 ப்ராசஸர் மற்றும் 4ஜிபி டிடிஆர்3 16 எம்ஹெர்ட்ஸ் ரேம் கொண்டிருப்பதால் இதன் இயங்கு வேகம் மிக அதிகமாக இருக்கும்.

யுஎஸ்பி போர்ட் மற்றும் எச்டிஎம்ஐ போர்ட் ஆகிய வசதிகளுடன் வரும் இந்த ஆல் இன் ஒன் பிசி ரூ.64,000க்கு விற்கப்படும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்