Home
Computer

நவீன வசதிகளுடன் தோஷிபா வழங்கும் புதிய டேப்லெட்!

By Karthikeyan
 நவீன வசதிகளுடன் தோஷிபா வழங்கும் புதிய டேப்லெட்!

தோஷிபா நிறுவனம் இப்போது தோஷிபா எக்சைட் எக்ஸ்10 எடி200 என்ற மிகவும் புதிய மெல்லிய டேப்லெட்டைக் களமிறக்குகிறது. இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு 3எக்ஸ் ஹனிகோம்ப் இயங்கு தளத்தில் இயங்குகிறது.

இந்த புதிய டேப்லெட் கடந்த மாதம் லாஸ் வேகாசில் நடைபெற்ற நுகர்வோர் மின்னனு சாதனங்கள் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. பலரால் பாராட்டும் பெற்றுள்ள இந்த டேப்லெட் ஆப்பிள் ஐபேட் 2 அல்லது சாம்சங் கேலக்சி டேப் 7.7 போன்ற டேப்லெட்டுகளுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய தோஷிபா டேப்லெட் 10.1 இன்ச் அளவில் தொடு வசதி கொண்ட டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. கேமராவுக்காக பின்புறம் 5 மெகா பிக்சல் கேமராவையும் 2 மெகா பிக்சல் முகப்புக் கேமராவையும் இந்த டேப்லெட் கொண்டுள்ளது.

இந்த டேப்லெட்டின் மெமரி வசதியைப் பார்த்தால் 12ஜிபி, 32ஜிபி மற்றும் 64ஜிபி என்ற 3 அளவுகளைக் கொண்டுள்ளது. விரும்பும் அளவைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். மேலும் இதில் மேக்ரோ எஸ்டி கார்டும் உண்டு.

இணைப்பு வசதிகளுக்காக இந்த தோஷிபா வைபை 802.11 பி/ஜி/என், எச்டிஎம்ஐ போர்ட், மைக்ரோ எச்டிஎம்ஐ, ப்ளூடூத் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போன்ற வசதிகளை இந்த டேப்லெட் கொண்டிருக்கிறது.

இந்த டேப்லெட்டின் பேட்டரி வசதியைப் பற்றிய விவரம் தெரியவில்லை. 8 மணி நேரம் திரைப்படம் பார்க்கும் மின் திறனையும் மற்றும் 13 மணி நேரம் இசை கேட்கும் நேரத்தையும் இந்த பேட்டரி வழங்குகிறது.

இந்த தோஷிபா டேப்லெட்டின் மொத்த தடிமன் 7.62 மிமீ ஆகும். அதுபோல் இதன் திரை ரேசியோ 16:10 ஆகும். வரும் விரைவில் இங்கிலாந்து சந்தைக்கு வருகிறது. இதன் விலை ரூ.30000 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X