Home
Computer

பொழுதுபோக்கு அம்சங்களுடன் புதிய தோஷிபா டேப்லெட்!

By Karthikeyan
பொழுதுபோக்கு அம்சங்களுடன் புதிய தோஷிபா டேப்லெட்!

தோஷிபா தனது அடுத்த படைப்பாக தோஷிபா எக்சைட் 7.7 என்ற புதிய டேப்லெட்டைக் களமிறக்குகிறது. இந்த டேப்லெட் மிக சூப்பரான தொழில் நுட்பங்களுடன் வருகிறது.

கருப்பு மற்றும் வெள்ளி வண்ணங்களில் வரும் இந்த டேப்லெட் 1280 x 800 பிக்சல் ரிசலூசனை வழங்கக்கூடிய ஒரு சூப்பரான டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே அமோலெட் கப்பாசிட்டிவ் தொடு வசதியைக் கொண்டது. இதன் எடை 380 கிராம் மட்டுமே.

இது ஒரு ஆன்ட்ராய்டு டேப்லெட் ஆகும். அதாவது இது தோஷிபா டேப்லெட் ஆன்ட்ராய்டு ஐஸ்க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தில் இயங்குகிறது. மேலும் க்வாட் கோர் 1.5 ஜிஹெர்ட் ப்ராசஸர் கொண்டிருப்பதால் இதன் வேகம் தாறுமாறாக இருக்கும். அதோடு இந்த டேப்லெட் யுஎள்பி ஜிஇபோர் போர்ஸ்2 மற்றும் என்விடியா டேக்ரா 3 சிப்செட்டும் கொண்டுள்ளது.

கேமராவைப் பொருத்தமட்டில் இந்த டேப்லெட் 2எம்பி முகப்பு கேமராவையும், 5 எம்பி பின்பக்கை கேமராவையும் கொண்டுள்ளது. இதன் பின்பக்க கேமரா ஆட்டோ போக்கஸ், எல்இடி ப்ளாஷ் 720பி வீடியோ மற்றும் ஜிஇஒ டேக்கிங் போன்றவற்றை சப்போர்ட் செய்யும்.

இதன் 1ஜிபி ரேமை 32ஜிபி வரை அதிகரிக்க முடியும். அதற்காக மைக்ரோஎஸ்டி கார்டையும் இந்த டேப்லெட் வழங்குகிறது.

இணைப்பு வசதிகளுக்காக இந்த டேப்லெட் ஜிபிஆர்எஸ், எட்ஜ், வைபை, 3ஜி, ப்ளூடூத், ஜிபிஎஸ் வசதி மற்றும் யுஎஸ்பி ஆகிய இணைப்பு வசதிகளையும் கொண்டுள்ளது.

இந்த டேப்லெட் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்டிருக்கிறது. அதற்காக ஏராளமான கேம்களை இந்த டேப்லெட் கொண்டுள்ளது. மேலும் பல கேம்களை பதிவிறக்கம் செய்ய முடியும். அதோடு வீடியோ ப்ளேயர் மற்றும் ஆடியோ ப்ளேயர் போன்றவற்றை இந்த டேப்லெட் சப்போர்ட் செய்வதால் சூப்பரான இசையைக் இதில் கேட்கலாம். அதோடு படமும் பார்க்கலாம். இதில் உள்ள ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் இந்த டேப்லெட்டுக்கு வலு சேர்க்கின்றன.

2ஜி மற்றும் 3ஜி போன்ற வசதிகளுடன் வரும் இந்த தோஷிபா டேப்லெட் வரும் ஜூன் மாதம் விற்பனைக்கு வர இருக்கிறது. இதன் விலை ரூ.30000 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X