குழந்தைகளுக்கான தோஷிபாவின் புதிய லேப்டாப்புகள்

Posted By: Staff

குழந்தைகளுக்கான தோஷிபாவின் புதிய லேப்டாப்புகள்
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் அன்பளிப்பாக தோஷிபா நிறுவனம் மலிவு விலையில் குழந்தைகளுக்கான லேப்டாப்பை வழங்க இருக்கிறது. இந்த மாதத்தி்ல இந்த புதிய லேப்டாப்புகள் விற்பனைக்கு வருகின்றன.

மலிவு விலை லேப்டாப் என்பதற்காக இது தரத்திலும் செயல் திறனிலும் எந்த விதத்திலும் குறையாமல் வடிவமைத்துள்ளது தோஷிபா. இந்த லேப்டாப்புகள் தோஷிபாவின் சாட்டிலைட் சீரிஸிஸ் வரிசையில் வருகின்றன.

இவற்றின் பெயர்கள் முறையே சி600, எல்700 எல்735டி மற்றும் பி700 ஆகும். இவற்றின் டிஸ்ப்ளே திரைகள் 13.3 இன்ச் முதல் 17.3 இன்ச் அளவுகளில் இருக்கும். இதன் தொடக்க நிலை லேப்டாப்புகள் சாட்டிலைட் சி600 சீரிஸில் வருகின்றன. அவை ரூ.17164லிருந்து இருக்கின்றன.

மேலும் அவற்றின் திரை அளவு 15.6 இன்சிலிருந்த 17.3 இன்ச் வரை இருக்கின்றன. எனவே தோஷிபாவின் புதிய லேப்டாப்புகள் அனைத்து வகையான வசதிகளையும் கொண்டிருக்கும் என நம்பலாம்.

தோஷிபா தனது வாடிக்கையாளர்களுக்கு நவீன எஎம்டி மற்றும் இன்டஸ் சிப்ஸ்களை வழங்க இருக்கிறது. அதாவது இதில் எஎம்டிக்கான ப்யூஷன் எபியுஎஸ் அடங்கும். மேலும் இதில் பென்டியம் மற்றும் கோர் ஐ3 சான்டி பிர்ட்ஜ் ப்ராசஸர் இருக்கும்.

குறிப்பாக இந்த லேப்டாப்புகள் எளிதாக நெட்வொர்க்குகளை சின்க்ரோனைஸ் செய்ய தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குகிறது. இதன் ஹார்ட் ட்ரைவ் 640ஜிபி சேமிப்பைக் கொண்டிருக்கும் அதுபோல் 4ஜிபி டிடிஆர்3 மெமரியையும் கொண்டிருக்கும்.

மேலும் இது இரண்டு 2.0 யுஎஸ்பி போர்ட்டுகளைக் கொண்டிருக்கும். அதுபோல் டிவிடி சூப்பர் மல்டி ட்ரைவ்களையும் கொண்டிருக்கும். இந்த புதிய தோஷிபாவின் சீரிஸ் லேப்டாப்புகள் மாணவர்களுக்கும் வேலையில் இருப்பவர்களுக்கும் மிகவும் கச்சிதமாக இருக்கும். இந்த எல்700 சீரிஸ் லேப்டாப்புகளின் திரை அளவு 13.3 முதல் 15.6 இன்ச்களாக இருக்கும்.

தோஷிபா எல்735 எல்635டியின் புதிய அப்டேட் ஆகும். இது அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என நம்பப்படுகிறது. தோஷிபா சாட்டிலைட் பி700 இன்டல் கோர் ப்ராசஸர்கள் கொண்டு இண்டல் வயர்லஸ் டிஸ்ப்ளயும் கொண்டிருக்கும். இதன் விலையைப் பார்த்தால் ரூ.30983லிருந்து இருக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot