டிவி ட்யூனருடன் வரும் தோஷிபாவின் புதிய டேப்லெட்!

By Karthikeyan
|
 டிவி ட்யூனருடன் வரும் தோஷிபாவின் புதிய டேப்லெட்!

தோஷிபாவின் அடுத்த படைப்பாக ஒரு புதிய டேப்லெட் வர இருக்கிறது. இந்த டேப்லெட்டுக்கு எடி330 என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த டேப்லெட் ஜெர்மனியில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த டேப்லெட் டிவி ட்யூனருடன் வருகிறது. அதனால் ஆசிய சந்தையில் இந்த டேப்லெட்டுக்கு பெரிய வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய தோஷிபா டேப்லெட் மிகவும் பெரிய டேப்லெட் ஆகும். அதாவது இது 13.3 இன்ச் அளவில் ஸ்லேட் வடிவில் வருகிறது. ஜெர்மனியில் உள்ள போனில் நடைபெற்ற தோஷிபா வேர்ல்ட் 2012 நிகழ்வில் இந்த டேப்லெட் பார்வைக்கு வைக்கப்பட்டது.

இந்த டேப்லெட் எந்த அளவிற்கு பெரியதென்றால் தோஷிபாவின் எடி270 ஸ்லேட் டேப்லெட்டை விட இரண்டு மடங்கு பெரியதாகும். இந்த புதிய டேப்லெட் பல நவீன தொழில் நுட்பங்களைக் கொண்டு வருகிறது.

குறிப்பாக இந்த எடி330 டேப்லெட் டேக்ரா 3 ப்ராசஸர் மற்றும் வெளிப்புறத்திற்கு தெரியாத ஆன்டனாவுடன் கூடிய டிவி ட்யூனர் ஆகியவை கொண்டு வருகிறது. தேவைப்பட்டால் இந்த ஆன்டனாவை நீட்டி மடக்க முடியும். வீடியோ உரையாடலுக்காக இந்த கேமரா 1.3 எம்பி முகப்பு கேமராவையும் கொண்டுள்ளது.

மேலும் இந்த டேப்லெட் சிம் கார்ட் ஸ்லாட், எஸ்டி கார்ட் ஸ்லாட் மற்றும் எச்டிஎம்ஐ போர்ட் ஆகிய வசதிகளும் உள்ளன. இந்த டேப்லெட்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. மற்றும் இதன் இயங்குதளம் பற்றிய தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X