Home
Computer

விரைவில் விற்பனைக்கு வரும் தோஷிபாவின் புதிய டேப்லெட்டுகள்!

By Karthikeyan
விரைவில் விற்பனைக்கு வரும் தோஷிபாவின் புதிய டேப்லெட்டுகள்!

தோஷிபாவின் எடி270 டேப்லெட்டுகள் லாஸ் வேகாசில் நடைபெற்ற நுகர்வோர் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டன. சமீபத்தில் நடைபெற்ற உலக மொபைல் கண்காட்சியில் இந்த டேப்லெட்டுகள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன. இந்த நிலையில், இந்த புதிய டேப்லெட்டுகள் விரைவில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த எடி270 டேப்லெட்டுகளின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இவை 7.7 இன்ச் அளவில் சூப்பர் ஆக்டிவ் மேட்ரிக்ஸ் ஒஎல்இடி டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கின்றன. இதன் பிக்சல் ரிசலூசன் 1280 x 800 ஆகும். மேலும் இந்த டிஸ்ப்ளே மல்டி டச் வசதி கொண்ட 16 மில்லியன் வண்ணங்களைக் கொண்டிருக்கின்றன. இந்த டிஸ்பளேயின் பாதுகாப்பிற்காக கோர்னிங் கொரில்லா க்ளாஸ் திரையும் உண்டு.

இந்த டேப்லெட்டுகளில் உள்ள பொழுதுபோக்கு அம்சங்களைப் பார்த்தால் இவை ஆடியோ ப்ளேயர், 1920 x 1080 பி வீடியோ அவுட் கொண்ட வீடியோ ப்ளேயர் மற்றும் அனலாக் ரேடியோ ஆகிய வசதிகளைக் கொண்டிருக்கின்றன. இவற்றின் ரேம் மெமரி 1024 எம்பி ஆகும். இந்த மெமரியை மைக்ரோ எஸ்டி கார்டு, மைக்ரோ எஸ்டிஎச்சி மற்றும் ட்ரான்ஸ் ப்ளாஷ் மூலம் 32 ஜிபி வரை அதிகரிக்க முடியும்.

இந்த டேப்லெட்டுகள் ஆன்ட்ராய்டு 4.0.3 ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்குதளத்தைக் கொண்டிருக்கின்றன. மேலும் இணைப்பு வசதிகளுக்காக எ2டிபியுடன் கூடிய ப்ளூடூத், வைபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி கனக்டருடன் கூடிய யுஎஸ்பி 2.0 எச்டிஎம்ஐ டி கனக்டர் போன்ற வசதிகளை இந்த டேப்லெட்டுகள் கொண்டிருக்கின்றன.

இந்த டேப்லெட்டுகளின் ஒலி அமைப்பு மிகவும் அம்சமாக உள்ளது. அதற்காக இந்த டேப்லெட் ஸ்டீரியோ சவுண்ட் அவுட்புட் கொண்ட ஸ்பீக்கரைக் கொண்டிருக்கிறது. மேலும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் மோனோ மைக்ரோபோன்களும் இந்த டேப்லெட்டுகளில் பார்க்க முடியும்.

இந்த டேப்லெட்டுகள் க்வாட்கோர் என்விடியா டேக்ரா 3 டி33 ப்ராசஸர் மற்றும் என்விடியா ஜிஇபோர்ஸ் க்ராபிக்ஸ் ப்ராசஸரையும் கொண்டிருக்கின்றன. மேலும் இந்த டேப்லெட் பார்க்க மிக ஸ்டைலாக இருக்கிறது. விரைவில் விற்பனைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X