Home
Computer

குறைந்த தடிமனுடன் புதிய தோஷிபா டேப்லெட்

By Super
குறைந்த தடிமனுடன் புதிய தோஷிபா டேப்லெட்
தோஷிபா எப்போதுமே ஒரு தொழில் நுட்பம் நிறைந்த நிறுவனமாகவே இருந்து வருகிறது. அதனால்தான் உலக அளவில் அந்த நிறுவனத்திற்கு நல்ல பெயரும் இருக்கிறது. குறிப்பாக தோஷிபா நிறுவனம் தொடக்கத்திலிருந்தே தன்னை ஒரு மின்னனு பொருள்களின் உற்பத்தியில் ஒரு முன்னோடியாக நிலை நிறுத்தி இருக்கிறது.

குறிப்பாக கணனி உற்பத்தியிலும் மற்றும் ஸ்மார்ட் போன் உற்பத்தியிலும் ஒரு நிலைத்த இடத்தைப் பெற்றிருக்கிறது. அதன் புதிய படைப்பு என்னவென்றால் அல்ட்ரா மெல்லிய எடி700 டேப்லட் ஆகும். இந்த புதிய டேப்லட் ஜப்பானின் டோக்கியோ நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பாக இந்த டேப்லட் ஜப்பானிய மக்களை ஆப்பிளின் ஐபேட் மோகத்திலிருந்து விடுவித்து தோஷிபாவின் பக்கம் இழுத்து வரும் என தோஷிபா நம்புகிறது.

தோஷிபா அல்ட்ரா மெல்லிய எடி700 டேப்லட் பலவகையான சிறப்பு அம்சங்களோடு வருகிறது. இதன் எடை 558 கிராம் மட்டுமே. இதன் பருமன் வெறும் 0.3 இன்ச் மட்டுமே. அதனால் இது பெரும்பாலான மக்களைக் கவரும் என நம்பலாம். இதன் 10.1 திரை டஸ்ப்ளே 1280*800 பிக்சல் ரிசலூசனைத் தருகிறது. மேலும் இது மெல்லியதாக இருப்பதால் தோஷிபாவின் அல்ட்ரா மெல்லிய எடி700 டேப்லட் ஆப்பிளின் ஐபேடை விட எடை குறைந்த மெல்லிய டேப்லட் ஆக இருக்கிறது.

தோஷிபாவின் அல்ட்ரா மெல்லிய எடி700 டேப்லட் ஆன்ட்ராய்டு 3.2 கொண்டிருப்பதால் இதன் செயல் திறன் மிக அபாரமாக இருக்கும். மேலும் இது 1ஜிபி மெமரி சேமிப்பை வழங்குகிறது. அதுபோல் இதில் 32ஜிபி இன்டர்னல் மெமரியும் உள்ளது. இது 1.2 ஜிஹர்ட்ஸ் டூவல் கோர் ப்ராசஸரைக் கொண்டுள்ளது. மேலும் இது 5 மெகாபிக்ஸல் ரியர் கேமராவையும் 2 எம்பி முகப்புக் கேமராவையும் கொண்டிருக்கிறது.

தோஷிபாவின் அல்ட்ரா மெல்லிய எடி700 டேப்லட் வரும் டிசம்பரில் ஜப்பான் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல் 2012ன் தொடக்கத்தில் எல்லா நாடுகளுக்கும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதிலிருக்கும் வைபை மற்றும் ப்ளூடூத் வசதிகள் கண்டிப்பாக வாடிக்கையாளர்களைக் கவரும் என நம்பலாம். மேலும் ஜிபிஎஸ் வசதியையும் கொண்டிருக்கிறது.

தோஷிபாவின் அல்ட்ரா மெல்லிய எடி700 டேப்லட்டின் விலை விரைவில் அறிவிக்கப்படும். தோஷிபாவின் எடி200 டேப்லட்டின் விலையை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X