ஜூலை மாதம் விற்ப்பனைக்கு வரும் டாப் 5 லேப்டாப்கள்.!
ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ள மேக்புக் ப்ரோ லேப்டாப் பொருத்தவரை 15.4-இன்ச் எல்இடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.!
தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் பயன்படுத்துவது லேப்டாப், இப்போது வரும் லேப்டாப் அனைத்தும் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் வெளிவருகிறது, மேலும் பல்வேறு தலைசிறந்த வடிவமைப்புகளுடன் மென்பொருள் உதவியுன் லேப்டாப் வெளிவருகிறது.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகமாக லேப்டாப் பயன்படுத்துகின்றனர், மேலும் கல்விக்கு இது மிகவும் பக்கபலமாக உள்ளது. இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் லேப்டாப் பயன்பாடுகள் சற்று குறைவாகதான் உள்ளது, மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் லேப்டாப் விலை மிகவும் அதிகமாக உள்ளது. பின்பு ஜூலை மாதம் விறப்பனைக்கு வரும் டாப் 5 லேப்டாப்களின் பட்டியலைப் பார்ப்போம்.

ஆப்பிள் மேக்புக் ப்ரோ:
ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ள மேக்புக் ப்ரோ லேப்டாப் பொருத்தவரை 15.4-இன்ச் எல்இடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் டச் பார் அமைப்பு கொண்டுள்ளது இந்த லேப்டாப். (2880-1800/220பிபிஐ)வீடியோ பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது, 2.8ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் இன்டெல் கோர் ஐ7 செயலி கொண்டுள்ளது இந்த லேப்டாப். 16ஜிபி ஆப் 2133எம்எச்இசெட் எல்பிடிடிஆர்3
ரேம் இவற்றில் அடக்கம். அதன்பின்பு மேக்ஒஎஸ் சியரா இயக்க முறைமை கொண்டுள்ளது இந்த லேப்டாப், இந்த லேப்டாப் விலைப் பொருத்தவரை ரூ.1,95,800ஆக உள்ளது.

லெனோவா யோகா 710:
லெனோவா யோகா 710 பொருத்தவரை 14.0 எப்எச்டி ஐபிஎஸ் எல்இடி டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது, மேலும் (1920-1080) வீடியோ பிக்சல் தீர்மானம். இன்டெல் கோர் ஐ7-7500யு செயலி இவற்றில் அடக்கம். 2.70ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 2ஜிபி டிடிஆர்3எல் கிராபிக்ஸ் இவற்றில் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு விண்டோஸ் 10 இயக்க முறைமை கொண்டுள்ளது இந்த லேப்டாப். இதன் விலைப் பொருத்தவரை ரூ.92,160ஆக உள்ளது.

எச்பி பெவிலியன்-15-ஏயு628டிஎக்ஸ்:
இந்த லேப்டாப் 15.6-இன்ச் எப்எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது, மேலும் (1920-1080) வீடியோ பிக்சல் தீர்மானம். இன்டெல் கோர் ஐ7-7500யு செயலி இடம்பெற்றுள்ளது. 4ஜிபி டிடிஆர்3 கேட்போர்ஸ் 940எம்எக்ஸ் கிராபிக்ஸ். விண்டோஸ் 10 இயக்க முறைமைகொண்டுள்ளது, 7-வது ஜென் இன்டெல் கோர் செயலி மற்றும் இதன் விலை ரூ.76,999ஆக உள்ளது.

டெல் இன்ஸ்பிரான் 13 5378:
பொதுவாக டெல் இன்ஸ்பிரான் 13 5378 லேப்டாப் 13-இன்ச் எப்எச்டி ஐபிஎஸ் எல்இடி டச் ஸ்கீரின் டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு (1920-1080) வீடியோ பிக்சல் தீர்மானம். இன்டெல் கோர் ஐ7-7500யு செயலி மற்றும் இன்டெல் எச்டி கிராபிக்ஸ் 620 இவற்றுள் அடக்கம். 8.0ஜிபி ஆப் 2400எம்எச்இசெட் டிடிஆர்4 ரேம். விண்டோஸ் 10 இயக்க முறைமை கொண்டுள்ளது. இதன் விலைப் பொருத்தவரை ரூ.77,953 ஆக உள்ளது.

ஆசஸ் ஜென்புக் யுஎக்ஸ்310:
இந்த லேப்டாப் 13.3-இன்ச் க்யுஎச்டி எல்இடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது,(3200-1800)வீடியோ பிக்சல் தீர்மானம், இன்டெல் கோர் ஐ5-7200யு செயலி மற்றும் கேட்போர்ஸ் 940எம்எக்ஸ் கிராபிக்ஸ் இடம்பெற்றுள்ளது. விண்டோஸ் 10 இயக்க முறைமை கொண்டுள்ளது இந்த லேப்டாப்.இதன் விலைப் பொருத்தவரை 76,999 ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications