ஆசஸ் நிறுவனம் பேட்போன் மற்றும் ட்ரான்ஸ்ஃபார்மர் பேட் டிஎஃப்-300டி என்ற டேப்லட்டினையும் அறிமுகம் செய்கிறது. இந்த புதிய எலக்ட்ரானிக் சாதனத்தினை ஆசஸ் நிறுவனம் மற்ற நாடுகளில் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த எலக்ட்ரானிக் சாதனங்களை ஆசஸ் நிறுவனம் நமது நாட்டிலும் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாதத்தில் ஆசஸ் நிறுவனத்தின் பேட்போன் மற்றும் ட்ரான்ஸ்ஃபார்மர் பேட் டிஎஃப்-300டி எலக்ட்ரானிக் சாதனம் நமது நாட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
ஆசஸின் இந்த புதிய மின்னணு சாதனங்கள் பற்றி சில வார்த்தைகளில் சொல்ல வேண்டும். அதாவது இந்த பேட்போன் என்பது டேப்லெட்டைப் போல் இருக்கும். அதனுள் ஒரு போன் இருக்கும். இந்த சாதனத்தில் போன் இணைப்பை வழங்கும் போது இந்த சாதனம் ஒரு ஆன்ட்ராய்டு டேப்லெட்டாகவும் அதே நேரத்தில் ஒரு போனாகவும் செயல்படும். இந்த எலக்ட்ரானிக் சாதனம் நமது நாட்டில் அறிமுகமானால் நிச்சயம் சாம்சங் கேலக்ஸி நோட்-2, கேலக்ஸி டேப்-2, மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ-100, விக்குடுலீக் வேமி நோட், ஐபால் ஏன்டி-5-சி போன்ற மற்ற பல மின்னணு சாதனங்களுக்கும் இடையில் கடும் போட்டி நிலவும். அப்படி போட்டி ஏற்படும் எலக்ட்ரானிக் சாதனங்களின் பட்டியலையும் இங்கே பார்க்கலாம்.