அக்டோபர் 2017 : இந்தியாவில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் டாப் 5 லேப்டாப்.!

By Prakash
|

இப்போது வரும் பல்வேறு நிறுவனங்களின் லேப்டாப் மாடலில் சிறந்த தொழில்நுட்ப வசதி இடம்பெறுகிறது. மேலும் லெனோவா, ஆசஸ் போன்ற நிறுவனங்களின் லேப்டாப் மாடல்களை தான் அதிகம் தேர்வு செய்கின்றர். மேலும் கண்டிப்பாக டூயல்-கோர் வசதி கொண்டு அனைத்து லேப்டாப் மாடல்களும் வெளிவருகிறது.

இந்தியாவில் பட்ஜெட் விலையில்  கிடைக்கும் டாப் 5 லேப்டாப்.!

இப்போது வரும் லேப்டாப் வடிவமைப்பில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் பட்ஜெட் விலையில் கடைக்கும் டாப் 5 லேப்டாப் மாடல்களின் பட்டியலை பார்ப்போம்.

ஹெச்பி- 15-BG008AU:

ஹெச்பி- 15-BG008AU:

இந்த ஹெச்பி லேப்டாப் மாடல் பொதுவாக 14-இன்ச் எச்டி எல்இடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு (1366-768)பிக்சல் தீர்மானம்
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஎம்டி குவாட்-கோர் இ2-7110 செயலி இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.
4GB DDR3L-1600 SDRAM மற்றும் 5400 rpm SATA உள் சேமிப்பு கொண்டுள்ளது இந்த லேப்டாப் மாடல். மேலும் பல்வேறுஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெச்பி மாடலின் விலைப் பொறுத்தவரை ரூ.19,990-எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெனோவா ஐடியாபேட்   110 80T70015IH:

லெனோவா ஐடியாபேட் 110 80T70015IH:

லெனோவா ஐடியாபேட் விலைப் பொறுத்தவரை ரூ.18,990-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும்
இன்டெல் பென்டியம் என்3710 செயலி இவற்றுள் இடம்பெற்றள்ளது. இந்த சாதனம் 4GB DDR3 ரேம் மற்றும் 1TB HDD வரை ஆதரிக்கப்படுகிறது. இக்கருவி 14.0-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பு கொண்டவையாக உள்ளது. மேலும் (1366-768)பிக்சல் தீர்மானம்இடம்பெற்றுள்ளது.

ஆசஸ்  X541NA-GO017:

ஆசஸ் X541NA-GO017:

இக்கருவியின் விலை மதிப்பு ரூ.19,695-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் 15.6-இன்ச் எல்இடி டிஸ்பிளே மற்றும் (1336-768)பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது இந்த லேப்டாப் மாடல். 64-பிட் இன்டெல் செலரான் டூயல்-கோர் என்3350 செயலி இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஏசர்  ஆஸ்பியர் ES1-132:

ஏசர் ஆஸ்பியர் ES1-132:

இந்த ஏசர் லேப்டாப் பொதுவாக 11.6 இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு டூயல்-கோர் என்3350 செயலி இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2ஜிபி ரேம் அதரவைக் கொண்டுள்ளது இந்த லேப்டாப் மாடல். இந்த சாதனம் 18,588-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல் இன்ஸ்பிரான் 15.6 3552:

டெல் இன்ஸ்பிரான் 15.6 3552:

டெல் இன்ஸ்பிரான் பொறுத்தவரை 14.4-இன்ச் டிஸ்பிளே மற்றும் (1336-768)பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது. இன்டெல் செலரான் என்3540 செயலி இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் விலை மதிப்பு ரூ.19,999 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Top 5 Budget laptops in India October 2017; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X