ரூ.320க்கு கம்ப்யூட்டர், நீங்க வாங்கிட்டீங்களா.??
ராஸ்ப்பெரி பை பவுன்டேஷன் நிறுவனம் விலை குறைந்த கணினிகளின் பட்டியலில் புதிய வகை கணினியை அறிமுகம் செய்திருக்கின்றது. ராஸ்ப்பெரி பை சீரோ என பெயரிடப்பட்டுள்ள இந்த கணினியின் விலை இந்திய மதிப்பில் ரூ.320 மட்டுமே. இதோடு தற்சமயம் வரை இது தான் மிக சிறிய கணினி ஆகும்.

சிறப்பம்சங்களை பொருத்த வரை ராஸ்ப்பெரி பை சீரோ கணினியானது ப்ராட்காம் பிசிஎம்2835 அப்ளிகேஷன் பிராசஸர், 1 ஜிகாஹெர்ட்ஸ் ஏஆர்எம்11 கோர் வழங்கப்பட்டுள்ளது. இதோடு ராஸ்ப்பெரி பை 1 மாடலை விட இந்த பிராசஸர் 40 சதவீதம் வேகமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 512 எம்பி ரேம், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை மினி-எச்டிஎம்ஐ சாக்கெட், 1080பி60 வீடியோ அவுட்புட், 40-பின் ஜிபிஐஓ ஹெட்டர் மற்றும் கம்போசிட் வீடியோ ஹெட்டர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் யுஎஷ்பி அல்லது ஈத்தர்நெட் போர்ட் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மென்பொருள் அம்சங்களை பொருத்த வரை ராஸ்ப்பியன், என்ற லினக்ஸ் சார்ந்த இயங்குதளம் கொண்டிருக்கும் இந்த சிறிய கணினி விரைவில் இந்தியாவிலும் வெளியாகும் என கூறப்படுகின்றது.
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications