Home
Computer

புதிய மேக்புக் லேப்டாப்புகளை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்!

By Super

புதிய மேக்புக் லேப்டாப்புகளை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்!
ஆப்பிள் நிறுவனம் 3 வகையான மேக்புக் ஏர் லேப்டாப்புகளை அறிமுகப்படுத்த இருக்கிறது என்ற செய்தி லேப்டாப் உலகில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது. உயர் தரமான செயல் திறன், குறைந்த எடை மற்றும் நவீன தொழில் நுட்பம் போன்ற சிறப்பு அம்சங்களால் மிகவும் பிரபலமாகியது மேக்புக் ஏர் வரிசை லேப்டாப்புகள்.

தற்போது புதிதாக வரும் இந்த மேக்புக் ஏர் லேப்டாப்புகள் 11இன்ச், 13இன்ச் மற்றும் 15இன்ச் ஆகிய 3 திரை அளவுகளில் வருகிறது. குறிப்பாக இவை வரும் ஆண்டின் முதல் காலாண்டில் வரும் என எதிர்பார்க்கலாம்.

இதில், 11 இஞ்ச் மற்றும் 13 இஞ்ச் மேக்புக் ஏர் லேப்டாப்புகள் பழைய மேக்புக் லேப்டாப்பின் அப்டேட் வெர்ஷனாக இருக்கும். ஆனால் 15 இன்ச் மேக்புக் ஏர் முற்றிலும் மாறுபட்டு புதிதாக வருகிறது. இந்த 15 இன்ச் மேக்புக் ஏர் விற்பனையில் வரவாற்று சாதனை படைக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் எதிர்பார்க்கிறது.

மேலும் இந்த புதிய லேப்டாப்புகளின் விலையை ஆப்பிள் கணிசமாக குறைத்து அறிமுகப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இந்த லேப்டாப்புகள் இன்ட்ல் கோர் ஐ5 மற்றும் ஐ7 பிராசஸர்ளைக் கொண்டிருக்கும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏராளமான நிறுவனங்கள் மேக்புக் ஏர் லேப்டாப்புகள் ஒத்த லேப்டாப்புகளை தயாரிக்க முயற்சி எடுத்தாலும் ஆப்பிளின் புதிய மேக்புக் ஏர் லேப்டாப்புகள் அந்த முயற்சிகளை தோற்கடிக்கும் என்று கருதப்படுகிறது. ஏனெனில் ஆப்பிளின் இந்த புதிய லேப்டாப்புகளில் உள்ள தொழில் நுட்ப வசதிகள் ஏராளம் ஏராளம்.

விற்பனையில் புதிய மைல்கற்களை எட்டி வரும் மேக்புக் ஏர் வரிசையில் வரும் புதிய மேக்புக் ஏர் லேப்டாப்புகள் மார்க்கெட்டில் ஒரு பெரிய அலையை ஏற்படுத்தும் என நம்பலாம். எனினும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X