இன்டர்நெட்டில் இவர்களை தெரியுமா உங்களுக்கு?

By Keerthi

  இன்றைக்கு மனிதனை தனக்கு சிறிது சிறிதாக அடிமைப்படுத்தி வரும் ஒரு உயிர் இல்லா ஜீவன் தான் இணையம் ஆகும், நாளை முதல் உலகமெங்கும் இணைய இணைப்பு கிடையாது என்று கூறினால் என்ன ஆகும் நம் வாழ்க்கை விரக்தியின் எல்லைக்கே சென்று விடும் எனலாம்.

  இணையம் நமக்கு தகவல்களைத் தருகிறது; நாம் வாழும் சமூகத்தை நம்முடன் இணைக்கிறது. வர்த்தகத்தையும், நம் அன்றாடப் பணிகளையும் மேற்கொள்ள அடிப்படைக் கட்ட மைப்பாய் இயங்குகிறது.

  நாம் மகிழ்வாக இருக்க, பொழுதினைப் பொறுப்போடும், ரசிப்புத் தன்மையுடனும் கழிக்கத் தேவையானவற்றைத் தருகிறது. இப்படி இன்னும் இந்த பட்டியலை நீட்டிக் கொண்டே செல்லலாம்.

  இது போல இணையத்தினை வடிவமைத்துத் தந்ததன் பின்னணியில் பல்லாயிரக் கணக்கானவர்கள் இருக்கலாம். இருப்பினும், தலைமைப் பொறுப்பில் இருந்து இந்த மாற்றங்களை அவ்வப்போது கொண்டு வந்தது சிலரே. அவர்களை இங்கு காணலாம்.

  ஸ்மார்ட் போன் கேலரிக்கு

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  #1

  இன்று இணையத்தின் தந்தையர்கள் என்று அழைக்கப்படுபவர்கள். இவர்கள் தான் இணையத்தினை முதன்முதலில் வடிவமைத்தவர்கள். அமெரிக்காவில் இயங்கிய பொறியாளர்கள். கம்ப்யூட்டர் விஞ்ஞானிகள். இணையத்தின் கட்டமைப்பான Transmission Control Protocol (TCP) and the Internet Protocol (IP), என்பதனை வடிவமைத்தவர்கள்.

  #2

  World Wide Web (WWW) என்னும் கட்டமைப்பை உருவாக்கியவர்.

  #3

  பின்லாந்து நாட்டைச் சேர்ந்த அமெரிக்க சாப்ட்வேர் பொறியாளர். லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் கட்டமைப்பிற்கு அடிப்படையை அமைத்தவர். யூனிக்ஸ் சிஸ்டம் குறித்து பல்கலையில் படித்த பின்னர், லினக்ஸ் சிஸ்டம் வடிவமைப்பினை தன் ஆய்விற்கு எடுத்துக் கொண்டு, அதில் வெற்றியும் பெற்றவர்.

  #4


  1991ல் இதனை வெளியிட்ட பின்னர், பல லட்சக் கணக்கானவர்கள் இன்று வரை இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். பலரால் இது மேம்பாடு அடைந்துள்ளது. சாதாரண சர்வர்கள் முதல், மெயின் பிரேம் கம்ப்யூட்டர்கள், சூப்பர் கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றின் இயக்க முறைமையாக லினக்ஸ் இயங்கி வருகிறது.

  #5

  டேனிஷ் நாட்டைச் சேர்ந்த கனடா நாட்டுக் குடிமகன். பொறியாளர். இன்று இணைய தளங்களில் பயன்படும் PHP ஸ்கிரிப்டிங் மொழியை அதன் வேரிலிருந்து அமைத்துக் கொடுத்தவர். இரண்டு கோடிக்கும் மேற்பட்ட இணைய தளங்களில் இது பயன்படுத்தப்படுகிறது. பத்து லட்சம் இணைய சர்வர்களை இது இயக்குகிறது. PHP என்பது முதலில் Personal Home Page என்பதன் சுருக்கமாக இருந்தாலும், இப்போது PHP Hypertext Preprocessor என அழைக்கப்படுகிறது.

  #6

  அமெரிக்க கம்ப்யூட்டர் விஞ்ஞானி. HTTP என்பதனை வரையறுத்து வடிவமைத்துத் தந்தவர். கம்ப்யூட்டர் நெட்வொர்க் ஆர்க்கிடெக்சர் என்னும் பிரிவில் ஒரு தலைமை விஞ்ஞானி.

  #7

  ஓப்பரா சாப்ட்வேர் நிறுவனத்தின் தற்போதைய தலைமை விஞ்ஞானி. இணைய பொறியாளர்களில் முன்னணியில் செயலாற்றியவர். Cascading Style Sheets (CSS) என்ற கோட்பாடினைக் கொண்டு வந்து செயல்படுத்தியவர்.

  #8

  மின் அஞ்சலின் தந்தை எனப் போற்றப்படுபவர். 1971ல் ARPANET கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில், முதன் முதலில் மின் அஞ்சலை இயக்கிக் காட்டியவர்.

  #9

  இணையத்தில் முதல் வைரஸ் என அழைக்கப்படும் மோரிஸ் வோர்ம் என்ற வைரஸை உருவாக்கியவர். இது 1988ல் நடந்தது. கம்ப்யூட்டர் மோசடி மற்றும் தீய நோக்கத்திற்காகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிரான சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட முதல் நபர்

  #10

  முதல் சோஷியல் இணைய தளமான மை ஸ்பேஸ் ("My Space") என்பதனை உருவாக்கியவர். 2003ல் இது உருவாக்கப்பட்டது.

  #11

  விக்கிபீடியா தளத்தினை உருவாக்கியவர். இந்த கட்டற்ற இணைய வெளி கலைக் களஞ்சியத்தை, 2001 ஆம் ஆண்டு ஜனவரி 15ல், இவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இப்போதும் இது தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

  #12

  பைல்களைப் பகிர்ந்து கொள்ளும் நேப்ஸ்டர் என்னும் கட்டமைப்பினை வரையறை செய்து 1998ல் வழங்கியவர்.

  #13

  P2P பிட் டாரண்ட் பைல் ஷேரிங் அமைப்பினை உருவாக்கித் தந்தவர்.

  #14

  அமேஸான் டாட் காம் என்னும் உலகின் பிரபலமான இணைய வர்த்தக தளத்தினை உருவாக்கியவர். இணைய வழி வர்த்தகத்தின் மாடல் இயக்கமாக இன்றும் பின்பற்றப்படும் வர்த்தக இணைய தளம்.

  #15

  பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி. 120கோடிக்கும் மேல் வாடிக்கையாளர்களைக் கொண்டு, உலகின் முதல் இடத்தில் இயங்கும் சமூக இணைய வலைத் தளம் பேஸ்புக் என்பது சொல்லத் தேவையற்ற தகவல்.

  #16

  உலகின் மிகப் பெரிய தேடுதல் தளமான கூகுள் டாட் காம் உருவாக்கிய கம்ப்யூட்டர் மற்றும் இணைய வல்லுநர்கள். பின்னர், கூகுள் நிறுவனம் பல பிரிவுகளைத் தொடங்கி இணையத்தைத் தன் வசப்படுத்தி விட்டது இன்று. தற்போது மொபைல் போனுக்கான ஆண்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையும் தந்து வருகிறது. எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி, உலகின் மிகப் பெரிய இணைய நிறுவனமாக கூகுள் இயங்கி வருகிறது.இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  ஸ்மார்ட் போன் கேலரிக்கு

  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more