Subscribe to Gizbot

இன்று நம்மை அடிமைபடுத்தி வைத்திருக்கும் ஒருவரின் கதை இது...!

Posted By:

இன்றைக்கு உலகம் முழுவதும் கூகுளை விட அதிகம் தெரிந்திருக்கும் ஒரே தளம் எது என்றால் அது பேஸ்புக் மட்டும்தான் பேஸ்புக்கின் அந்த பேஸ்புக் பற்றி உங்களுக்கே தெரியாத சில விஷயங்களை இங்கு பார்க்கலாமாங்க

ஹார்வேர்டு பல்கலைக்கழக மாணவர்களால் 2004ம் ஆண்டு சும்மா விளையாட்டு போக்கில் முதலில் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த பேஸ்புக் இது ஆரம்பிக்கப்படும் போது இவ்வளவு உயரம் வரும் என நிச்சயம் யாரும் எதிர்பார்க்கவில்லை.

இன்றைகிகு உலகின் அனைத்து மூலைகளிலும், ஆலவிருட்சமாக வளர்ந்து, டிஜிட்டல் உலகில் முதல் இடத்தில் இயங்கும் இந்த நிறுவனம், அப்போது ஒரு சிறிய விடுதியின் ஒதுக்குப் புறமான அறையில் தொடங்கப்பட்டது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பேஸ்புக் வரலாறு இதுதான்

#1

பத்தாண்டுகளுக்கு முன்பு அதனை "Thefacebook" என இதனைத் தொடங்கிய மார்க் ஸூக்கர்பெர்க் பெயரிட்டார். 2003 ஆம் ஆண்டு அக்டோபரில், ஸூக்கர்பெர்க் மற்றும் அவரது வகுப்புத் தோழர்களான ஆண்ட்ரூ மெக்கலம், கிறிஸ் ஹ்யூஸ் மற்றும் டஸ்டின் மொஸ்கோ விட்ஸ் ஆகியோர் பேஸ்மேஷ்(Facemash) என்னும் இணைய தளம் ஒன்றை உருவாக்கி, அதனை யாவரும் அணுகி, இரண்டு மாணவர்களின் படத்தில் எது சிறந்தது என்று ஒப்பிடும் வசதியைத் தந்தனர்.

பேஸ்புக் வரலாறு இதுதான்

#2

இதனை விளம்பரப்படுத்தி பிரபலமாக்குவதற்காக, அப்போது ஹார்வேர்ட் பல்கலைக் கழகம் மாணவர்களுக்கென நடத்தி வந்த இணைய தளங்களை மார்க் ஸூக்கர்பெர்க் முடக்கினார் என்று பலர் வதந்திகளை பரப்பி மார்க்கின் தளத்தை முடக்க முயற்சி செய்தனர்

பேஸ்புக் வரலாறு இதுதான்

#3

தொடக்கத்தில் Facemash என அழைக்கப்பட்ட பேஸ்புக் தளத்தினை, ஹார்வேர்ட் பல்கலை நிர்வாகம் மூடியது. காப்புரிமை, பாதுகாப்பு, தனி நபர் சுதந்திரம் ஆகியவற்றில் அந்த தளம் தலையிடுவதாக, பல்கலைக் கழக அதிகாரிகள் மார்க் ஸூக்கர்பெர்க் மீது நடவடிக்கை எடுத்தனர். இதன் பின்னரே, ஸக்கர்பெர்க் "thefacebook." என்னும் புதிய தளத்தினை அமைத்தார்.

பேஸ்புக் வரலாறு இதுதான்

#4

2004 பிப்ரவரி 4 ஆம் நாள், ஸக்கர்பெர்க் thefacebook.com என்னும் தன் தளத்தினை இயக்கத் தொடங்கினார். தொடங்கப்பட்ட 24 மணி நேரத்தில், 1,500 பயனாளர்கள் இதில் இணைந்தனர்.

பேஸ்புக் வரலாறு இதுதான்

#5

ஹார்வேர்ட் பல்கலையில் பட்ட வகுப்பு மாணவர்களில் பாதிப்பேர் இதில் இணைந்தனர். பின்னர், இந்த தளத் தினை மற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்த அனுமதிக்கப் பட்டனர்.

பேஸ்புக் வரலாறு இதுதான்

#6


தொடக்கத்தில் பேஸ்புக் இணைய தளத்தில் போட்டோக்கள் அனுமதிக்கப்படவில்லை. அக்டோபர் 2005ல், ஒவ்வொரு பயனாளரும் எவ்வளவு போட்டோக்கள் மற்றும் படங்களை அப்லோட் செய்து பதிவு செய்து கொள்ளலாம் என்று அனுமதி தரப்பட்டது.

பேஸ்புக் வரலாறு இதுதான்

#7

இன்று பேஸ்புக் இணைய தளத்தில் போட்டோக்களே முக்கிய அம்சங்களாக உள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 2013 ஆண்டு வரை, இந்த தளத்தில் பதியப்பட்ட படங்களின் எண்ணிக்கை 27 ஆயிரம் கோடியைத் தாண்டி யதாக அறிவிக்கப்பட்டது. நாள் தோறும் 39 கோடி படங்கள் அப்லோட் செய்யப்படுகின்றன.

பேஸ்புக் வரலாறு இதுதான்

#8

கல்லூரிகள், பள்ளிகள் என்ற எல்லை வரையறையைத் தாண்டி, பேஸ்புக் இணைய தளத்தில் பல பிரிவினரும் இணைய, இந்த தளம் அசுர வேகத்தில் வளரத் தொடங்கியது. 2006, செப்டம்பர் 26ல், பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் இணைந்து பதிந்து கொள்ளலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டது.

பேஸ்புக் வரலாறு இதுதான்

#9

இதனால், 2006 ஆண்டு இறுதியில், பயனாளர் எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சம் என்ற எண்ணிக்கையை எட்டியது. அதற்கு முந்தைய ஆண்டில், இது 55 லட்சமாக மட்டுமே இருந்தது.

பேஸ்புக் வரலாறு இதுதான்

#10

2006 செப்டம்பரில், யாஹூ நிறுவனம் நூறு கோடி டாலர் கொடுத்து, பேஸ்புக் இணைய தளத்தினை வாங்க முன்வந்தது. பேஸ்புக் இணைய தள நிறுவனத்தில் முதன் முதலில் முதலீடு செய்த பீட்டர் என்பவர், இதனை ஏற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தினார்.

பேஸ்புக் வரலாறு இதுதான்

#11

ஆனால், இதற்கென கூட்டப்பட்ட கூட்டத்தில், 22 வயது இளைஞரான மார்க், இந்த கூட்டம் 10 நிமிடத்தில் முடியப்போகிறது. நாங்கள் எங்கள் இணையதளத்தை விற்கப் போவதில்லை என அறிவித்தார்.

பேஸ்புக் வரலாறு இதுதான்

#12


ஏனென்றால், பணம் சம்பாதிப்பதை தன் இலக்காக என்றைக்குமே ஸக்கர்பெர்க் கொண்டதில்லை. இந்தப் பணத்தை வைத்து நான் என்ன செய்திட முடியும்? வேண்டுமானால், இன்னொரு சமூக தளத்தைத் தொடங்கலாம். அதற்கு இதனையே வளப்படுத்துவேன் என்றார்.

பேஸ்புக் வரலாறு இதுதான்

#13


பேஸ்புக் இணையதளத்தின் முதல் 30 மாதங்கள், பயனாளர்களின் தகவல் பக்கங்களைப் பதிந்து இயக்குவதிலேயே இருந்தன. செப்டம்பர் 2006ல், முதல் முதலாக, பேஸ்புக் தளத்தில் செய்திகள் தரப்பட்டன.

பேஸ்புக் வரலாறு இதுதான்

#14

உங்கள் சமூக வளைவில் என்ன நடக்கின்றன என்று தகவல்களைத் தருவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதனால், தொடர்ந்து ஒரு நிகழ்வு சார்ந்து கிடைக்கும் தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இதனுடன் பேஸ்புக் மினிபீல்டு(MiniFeed) என்ற வசதியையும் கொடுத்தது. இதில் பயனாளர் ஒருவரின் சமூக செயல்பாடுகள் தொகுக்கப்பட்டன.

பேஸ்புக் வரலாறு இதுதான்

#15

2007 ஆம் ஆண்டு மே 24 அன்று, பேஸ்புக் தன்னுடைய பேஸ்புக் ப்ளாட் பார்ம்(Facebook Platform) என்னும் மேடையை மக்களுக்கு வழங்கியது. இது, பேஸ்புக் தளத்தில் இயங்கக் கூடிய புரோகிராம் களை மற்றவர்கள் தயாரித்து வழங்குவதற்கான மேடையாக அமைந்தது.

பேஸ்புக் வரலாறு இதுதான்

#16

தர்ட் பார்ட்டி(Third Party) அப்ளிகேஷன்களுக்கு உதவி புரிய பேஸ்புக் மார்க்அப் லேங்குவேஜ்(Facebook Markup Language) என்னும் வசதியையும் இதனோடு அளித்தது. பல முக்கிய அப்ளி கேஷன்கள் பேஸ்புக் தள செயல்பாட்டில் இணைந்தன.

பேஸ்புக் வரலாறு இதுதான்

#17

நிறுவனம் தொடங்கி ஐந்தாண்டுகள் கழித்து, பேஸ்புக் நிறுவனம் நல்ல லாபத்துடன் இயங்குவதாக அறிவிக்கப்பட்டது. 2009ல், இந்நிறுவனம் பெற்ற வருமானம் 77.7 கோடி டாலர்.

பேஸ்புக் வரலாறு இதுதான்

#18


இது 2008ல் பெற்றதைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக இருந்தது அப்போது பேஸ்புக்கில்.

பேஸ்புக் வரலாறு இதுதான்

#19

2012 ஆம் ஆண்டு மே மாதம், தன் பொதுப் பங்கு வெளியீட்டினை பேஸ்புக் மேற்கொண்டது. இதன் மூலம் 1,600 கோடி டாலர் திரட்டியது. அமெரிக்க சரித்திரத்தில், இது மூன்றாவது பெரிய பங்கு வெளியீடாக அமைந்தது.

பேஸ்புக் வரலாறு இதுதான்

#21

சென்ற 2012 ஆம் ஆண்டு, அக்டோபர் 4ல், பேஸ்புக் இணையதளத்தில் ஒரு மாதத்தில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 100 கோடியைத் தாண்டியதாக, மார்க் ஸூக்கர்பெர்க் அறிவித்தார்.

பேஸ்புக் வரலாறு இதுதான்

#21

ஏறத்தாழ, இந்தப் புவியில் வாழும் ஏழு பேரில் ஒருவர், பேஸ்புக் பயனாளராக உள்ளனர். நூறு கோடிப் பேரை, ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள வைத்து, நட்பு ரீதியாக இணைப்பது என்பது மிகப் பெரிய பணி என அடக்கத்துடன் மார்க் ஸக்கர்பெர்க் கூறினார். என் வாழ்வில் இதுதான் நான் அதிகம் பெருமைப்படும் விஷயம் என்று கூறினார் மார்க்....இதே போல் நாம் தினமும் பயன்படுத்தும் மொபைல் போன் தோன்றிய அந்த நிகழ்வை தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யுங்கள்...இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more