ஹார்ட் டிஸ்க் குறித்து விரிவாக தெரிந்து கொள்வோமா?

By Siva
|

கம்ப்யூட்டர்களின் உபயோகங்கள் அதிகமாக அதிகமாக ஹார்ட் டிரைவ்களின் திறன்களும் அதிகமாகி கொண்டே வருகிறது. ஹார்ட் டிரைவ் என்றால் உண்மையில் என்ன? ஹார்ட் டிரைவ் டிஸ்க்கில் வைக்கப்படும் ஒரு காந்த டிஸ்க் தான் ஹார்ட் டிரைவ். இதுதான் ஒரு கம்ப்யூட்டருக்கு தலையாயதாக உள்ளது.

ஹார்ட் டிஸ்க் குறித்து விரிவாக தெரிந்து கொள்வோமா?

இந்த ஹார்ட் டிரைவ் மூலம் தான் ஒரு கம்ப்யூட்டரில் பார்ப்பது, படிப்பது, எழுதுவது என அனைத்தும் சாத்தியப்படுவதோடு அதனை சேமிக்கவும் உதவுகிறது

நாம் எழுதும் ஒவ்வொரு டேட்டாவும் ஹார்ட் டிஸ்க்கில் ஹேஷ் டேபிள் மற்றும் இண்டெக்ஸ் டேபிளாக சேமிக்கப்படுகிறது. இனி தற்போது ஹார்ட் டிஸ்க்கின் வரலாறு குறித்து பார்ப்போம்

கடந்த 1956 ஆம் ஆண்டு ஐபிஎம் நிறுவனம் ஐபிஎம் மாடல் 350 என்ற டிஸ்க் ஃபைலை கண்டுபிடித்தது. இதுதான் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஹார்ட் டிஸ்க். மேலும் முதன்முதலாக ஆப்பிள் 5MB கொண்ட ஒரு ஹார்ட் டிஸ்க்கை கடந்த 1981ஆம் ஆண்டு கண்டுபிடித்தது.

ஹார்ட் டிஸ்க் குறித்து விரிவாக தெரிந்து கொள்வோமா?

இதன் விலை $3200 ஆகும். மேலும் இந்த ஹார்ட் டிஸ்க்குக்கு போடப்படும் கேபினட் ஒரு பிரிட்ஜ் அளவுக்கு இருந்ததோடு அதன் எடை சுமார் 250 கிலோவும் இருந்ததாம்

அதன் பின்னர் ஐபிஎம் நிறுவனம் முதல்முறையாக 1GB ஹார்ட் டிஸ்க்கை கண்டுபிடித்து அதற்கு ஐபிஎம் 3380 மாடல் என்று பெயரிட்டது. பின்னர் 1980ஆம் ஆண்டு 2.52 GB திறன் உள்ள ஹார்ட் டிஸ்க்கை கண்டுபிடித்தது. இதன் மூஉலம் வினாடிக்கு 3MB மூலம் டேட்டாவை டிரான்ஸ்பர் செய்யலாம்

ஹார்ட் டிஸ்க் குறித்து விரிவாக தெரிந்து கொள்வோமா?

அதன் பின்னர் தற்போதைய ஹார்ட் டிஸ்க்குகளுக்கு முன்னோடியாக 1980ஆம் ஆண்டு சீகேட் என்ற ஹார்ட் டிஸ்க்கை ஐபிஎம் நிறுவனம் கண்டுபிடித்தது. பர்சனல் கம்ப்யூட்டர்களுக்கு உபயோகப்படுத்தப்படும் இந்த ஹார்ட் டிஸ்க்கின் விலை அப்போது $1500 என்பது குறிப்பிடத்தக்கது. இதன் திறன் 5MB என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் ஆப்பிள் கண்டுபிடித்த 5MB ஹார்ட் டிஸ்க்குகள் 1981ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால் இதன் விலை $3500 என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் நாள் ஆக ஆக ஒரு ரூம் அளவு இருந்த ஹார்ட் டிஸ்க் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி தற்போது கையளவுக்கு குறைந்துள்ளது

செப்டம்பர் 25 : மிரட்டலான ஜியோனி எம்7 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!செப்டம்பர் 25 : மிரட்டலான ஜியோனி எம்7 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த 2013ஆம் ஆண்டு 300PB (பெராபைட்ஸ்) ஒரு பெராபைட் என்பது 1024 டெர்ராபைட்) அளவுக்கு டேட்டா செண்டரையும், யூடியூப் நிறுவனம் 500PB அளவுக்கு டேட்டா செண்டரை 2015ஆம் ஆண்டும் நிறுவியது. மேலும் ஹார்ட் டிஸ்க்கின் விலையும் மிகக்குறைந்த விலைக்கு வந்தது. இதன் விலை ஒரு லட்சம் டாலரில் இருந்து தற்போது ஒருசில செண்ட்களுக்கு இறங்கியுள்ளதே இதற்கு சான்று ஆகும்

Best Mobiles in India

Read more about:
English summary
With the rise of SSD in the computing industry, the extinction of Hard drives is near. Today, we bring you some of the interesting facts about hard drives

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X