உங்க கம்பியூட்டர்ல இந்த பேக் அப் எல்லாம் உங்ககிட்ட இருக்கா..?

By Keerthi
|

இன்றைக்குகம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில் அதில் உள்ள டேட்டாவினை குறிப்பிட்ட கால அவகாசத்தில் சில டேட்டாக்களை பேக்கப் எடுத்து வைக்க முயற்சிப்பதே இல்லை. இதற்குக் காரணம் நம் கம்ப்யூட்டர் என்ன நின்றா போய்விடும்? என்ற தவறான எண்ணப் போக்குதான்.

இந்த தவற்றைப் பலர் செய்கின்றனர். முக்கியமான பைல் களைப் பேக்கப் எடுப்பதில்லை. ஒரு சிலருக்கோ முக்கிய மான பைல்கள் எவை என்று தெரிவதில்லை.

எந்தெந்த பைல்களை எல்லாம் பேக்கப் எடுக்க வேண்டும்? நீங்கள் உருவாக்கிய எல்லா பைல்களையும் (வேர்ட், எக்செல், அக்சஸ், பவர்பாயிண்ட் பைல்கள்) பேக்கப் எடுக்க வேண்டும்.

எழுத்து வகைகள், ஐகான்கள், கர்சர்கள், வால்பேப்பர்கள், தீம்கள், ஸ்கிரீன்சேவர்கள், எம்பி3 பைல்கள், வீடியோ பைல்கள் என இண்டர்நெட்டில் இருந்து டவுன்லோடு செய்த எல்லா பைல்களையும் பேக்கப் எடுக்க வேண்டும்.

இமெயில்கள், இமெயில்களின் விதிகள், பேவரிட் தளங்கள், முகவரி புத்தகங்கள், நண்பர்கள் பட்டியல்கள் என இண்டர்நெட் சேவைகள் தொடர்பானவற்றையும் பேக்கப் எடுக்க வேண்டும். இவற்றை பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்.

#1

#1

எம்எஸ் வேர்ட், எம்எஸ் எக்செல் போன்ற பெரும்பாலான அப்ளிகேஷன்கள் வழியாக நீங்கள் உருவாக்குகிற பைல்களை My Documents என்ற போல்டரில்தான் கம்ப்யூட்டர் சேமிக்கும். எனவே இந்த போல்டரைப் பேக்கப் எடுக்க வேண்டும்.

#2

#2

விண்டோஸ் எக்ஸ்பி கம்ப்யூட்டர்களில் படங்களை My Pictures போல்டரிலும், ஆடியோ பைல்களை My Music போல்டரிலும், வீடியோ பைல்களை My Video போல்டரிலும் போட்டு வைக்கும்.

#3

#3

இந்த போல்டர்கள் எல்லாமே My Documents போல்டரின் கீழ்தான் வருகின்றன. எனவே My Documents போல்டரை பேக்கப் எடுத்தால் இவையும் தாமாகவே பேக்கப் ஆகிவிடும்

#4

#4

மைக்ரோசாப்ட் ஆபீஸ் அப்ளிகேஷனைப் பயன்படுத்துகிறவர்கள் பல செட்டிங்களை அங்கு கொடுத்திருக்கலாம். மெனு, டூல்பார், டெம்ப்ளேட் போன்ற செட்டிங்கள், இமெயில் விதிகள் எனப் பலவற்றை பேக்கப் எடுக்க Save My Settings Wizard என்ற ஒன்றை ஆபீஸ் எக்ஸ்பி தந்துள்ளது

#5

#5

ஆபீஸ் எக்ஸ்பி சிடி டிஸ்க்கில் உள்ள இதை நிறுவினால் மைக்ரோசா ப்ட் ஆபீஸ் தொடர்பான எல்லா செட்டிங்குகளையும் பேக்கப் எடுக்கலாம்.

#6

#6


பல அப்ளிகேஷன்களை உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவும் பொழுது அவை தங்களுக்கு வேண்டிய எழுத்து வகைகளை உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவி இருக்கும். இண்டர்நெட்டில் இருந்து பல எழுத்து வகைகளை உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுன்லோடு செய்திருப்பீர்கள்.

C:/windows போல்டரின் கீழ் Fonts என்ற பெயரில் உள்ள போல்டரில்தான் எல்லா எழுத்து வகைகளும் காணப்படும். இதை பேக்கப் எடுங்கள்.

#7

#7

இன்டர்நெட் வெப் தளங்களில் நீங்கள் நுழைந்தவுடன் இந்த தளங்களுக்கு மீண்டும் வர வேண்டும் என்ற ஆவல் பிறக்கலாம். அப்படிப்பட்ட தளங்களை நினைவில் வைத்துக் கொள்ளும்படி பிரவுசருக்கு தெரிவிக்க முடியும். இதற்காகவே Bookmarks அல்லது Favorites என்ற மெனு பிரவுசரில் காணப்படும்.

#8

#8

பிரவுசருக்கு அடையாளம் காட்டப்பட்ட வெப் தளங்களின் பட்டியல் Bookmarks அல்லது Favoritesல் சேமிக்கப்பட்டிருக்கும். இந்த பட்டியலை பேக்கப் எடுக்க வேண்டும். எப்படி பேக்கப் எடுப்பது என்பது பிரவுசரை பொறுத்து மாறுபடும். எடுத்துக்காட்டாக இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் File=>Import and Export கட்டளை மூலம் அந்த பேவரிட் பட்டியலை ஒரு பைலில் சேமித்து பின்பு அந்த பைலை பேக்கப் எடுக்க வேண்டும்.

#9

#9

உங்களுக்கு வந்துள்ள இமெயில்களை நீங்கள் பேக்கப் எடுக்க வேண்டும். மேலும் உங்கள் இமெயில் அக்கவுண்ட் பற்றிய விவரங்கள், முகவரி புத்தகம், இமெயில் வடிகட்டல் விதி, சிக்னேச்சர் போன்றவற்றையும் பேக்கப் எடுக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் இமெயில் புரோகிராமில் எப்படி பேக்கப் எடுப்பது என்பதை தெரிந்து கொண்டு அதன்படி செயல்படுங்கள்.

#10

#10

மேலும், விண்டோஸின் Find அல்லது Search கட்டளை மூலம் BMP, JPG, JPEG, GIF, SCR, WAV, MDI, MP3, MPG, DAT போன்ற பைல்கள் கம்ப்யூட்டரில் எங்குள்ளன என்று தேடி அவற்றை பேக்கப் எடுப்பது நல்லது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X