சத்தியமா இதுவொரு 'மொக்க' லேப்டாப்புங்க!

Posted By:

லேப்டாப்கள் பலவகை அதில் இதுவும் ஒருவகை! மடிக்கணினிகள் என தமிழில் அழைக்கப்படும் இந்த லேப்டாப்கள் இன்றைய தினத்தில் மிகவும் சாதாரணமாகிவிட்டது என்றே சொல்லலாம்.

உண்மைதான்! இளைய சமுதாயத்தினர் அனைவரும், அல்லது பெரும்பாலானோர் லேப்டாப் பயன்படுத்துகின்றனர். லேப்டாப்கள் பற்றிய தகவல்களையும் விலை விவரங்களையும் விரல் நுனியில் வைத்துள்ளனர் என்பதே உண்மை.

அழகிய லேப்டாப்கள் சாதன சந்தைகளில் பலவுள்ளன. இந்நிலையில், மொக்கை லேப்டாப்கள் சிலவற்றை இங்கே வரிசைப்படுத்தியுள்ளோம். தகவல்கள் கீழே!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
தோஷிபா கோச்மியோ X305-Q706:

சத்தியமா இதுவொரு 'மொக்க' லேப்டாப்புங்க!

தோஷிபா நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த லேப்டாப்பானது, பிங்க் மற்றும் சிவப்பு வண்ணத்தில் மட்டுமே வெளியிடப்பட்டது. அதிலும் இதன் மேல்பக்கங்கள் தீ ஜுவாலை வருவதைப்போல் வடிவமைத்திருந்தார்கள். இது வெளியான வருடம் - 2009.

1981 : த ஒச்போர்னே 1

சத்தியமா இதுவொரு 'மொக்க' லேப்டாப்புங்க!

முதல்முதலில் விற்பனையில் வெற்றிபெற்ற இந்த லேப்டாப் கணினியின் எடை எவ்வளவு தெரியுமா? 23.5 பவுண்ட்கள்!

இந்த லேப்டாப், CP/M என்ற இயங்குதளத்தின் மூலமாக செயல்பட்டது. இதில் 5 அங்குல மோனோகுரோம் திரை இருந்ததென்பதும் குறிப்பிடத்தக்கது.

1999 : ஆப்பிள் ஐபுக் 3ஜி

சத்தியமா இதுவொரு 'மொக்க' லேப்டாப்புங்க!

இந்த லேப்டாப் Wifi வசதியுடன் வெளியானது. Wifi வசதியுடன் வெளியான முதல் லேப்டாப் சாதனமும் இதுவே! அழகிய வடிவமைப்புடனும் வெளிவந்தது இதன் சிறப்பம்சம்!

2007: OLPC XO லேப்டாப்.

சத்தியமா இதுவொரு 'மொக்க' லேப்டாப்புங்க!

பார்ப்பதற்கு மிகவும் அழகாக தோற்றமளிக்கும் இந்த லேப்டாப் சிறப்பாக இருக்கும். இது குழந்தைகளுக்காக பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு! இது அப்பொழுது $400 க்கு விற்கப்பட்டது.

ஈகோ பார் பென்ட்லி:

சத்தியமா இதுவொரு 'மொக்க' லேப்டாப்புங்க!

இந்த விலையுயர்ந்த லேப்டாப்புக்கு ஈகோ என்ற பெயர்தான் சரியாக இருக்குமாம். பென்ட்லி மோட்டார்ஸ் நிறுவனத்தால் 2008ல் வெளியிடப்பட்டது. அப்பொழுது இதன் விலை $19,800 அமெரிக்க டாலர்கள்!

ஹெச்பி பெவிலியன் dv6:

சத்தியமா இதுவொரு 'மொக்க' லேப்டாப்புங்க!

ஹெச்பி நிறுவனம் வடிவமைத்து வெளியிட்ட இந்த லேப்டாப்பினை 'ஆர்டிஸ்ட் பதிப்பு' என்றே அழைத்தார்கள். இந்த மொக்கை லேப்டாப்பானது 2009ல் வெளியானது.

டூயல் ஸ்க்ரீன் லேப்டாப்:

சத்தியமா இதுவொரு 'மொக்க' லேப்டாப்புங்க!

இந்த லேப்டாப்புக்கு இரண்டு திரை இருக்கும். இரண்டு தலைகொண்ட பாம்பினைப்போல பார்க்கவே கன்றாவியாக இருக்கும். இந்த இரண்டு படங்களில் ஒன்று லெனோவா நிறுவனத்தின் திங்க்பேட் லேப்டாப். மற்றொன்று ஸ்பேஸ் புக் நிறுவனத்தின் லேப்டாப்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Gadgets Gallery

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot