Home
Computer

உறுதியான பேனலுடன் வரும் புதிய ஜீடேக் டேப்லெட்!

By Super

உறுதியான பேனலுடன் வரும் புதிய ஜீடேக் டேப்லெட்!
ஒவ்வொரு நாளும் பல்வேறு வடிவங்களில் பல்வேறு அளவுகளில் ஏராளமான டேப்லெட்டுகள் வந்துகொண்டே இருக்கின்றன. டேப்லெட் நிறுவனங்களும் தலை சிறந்த டேப்லெட்டுகளை வழங்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றனர்.

அந்த வரிசையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜீடேக் நிறுவனம் மிகவும் தரமான உறுதியான நீண்ட ஆயுளைக் கொண்ட ஒரு புதிய டேப்லெட்டை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஆனால் அதற்குள் அந்த டேப்லெட் உலக அளவில் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

ஜீடேக் ஸட்710 என்று அழைக்கப்படும் இந்த புதிய டேப்லெட் மிகவும் சிறிய ஆனால் மிக அழகான டேப்லெட் ஆகும். இது ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் இயங்குகிறது. இதை 5 அடி உயரத்திலிருந்து கீழே போட்டாலும் உடையாத உறுதியைக் கொண்டுள்ளது. தூசி மற்றும் நீர் தடுப்பு வசதியைக் கொண்டிருக்கிறது.

இது ஆன்ட்ராடய்டு வி2.3 வெர்சன் அல்லது அதை விட உயர்ந்த ஜிஞ்சர்ப்ரீடு இயங்குதளத்தைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும் இது ஒரு கையடக்க வடிவமைப்பை கொண்டிருக்கிறது.

மேலும் -30டிகிரி முதல் +60 வரையிலான எந்த தட்பவெப்ப நிலையிலும் அசராமல் இயங்கும் வலிமை கொண்டது. அதோடு யூசர் ப்ரண்டிலியாகவும் இருக்கும். மேலும் யுஎஸ்பி போர்ட்டுகள், மைக்ரோ எஸ்டி மெமரி கார்டு ஸ்லாட்டுகள், ஸிம் கார்டு ஸ்லாட்டுகள் போன்ற ஏராளமான வசதிகளை வழங்குகின்றன.

இந்த ஜீடேக் டேப்லெட்டின் சேமிப்பு வசதியைப் பார்த்தால் அது 16ஜிபி கொண்டது. அந்த சேமிப்பை விரிவுபடுத்தவும் முடியும். 802.பி/ஜி/என் அதி வேகம் கொண்ட வைஃபை இணைப்பையும் வழங்குகிறது. அதுபோல் ஜிபிஎஸ் வசதி கொண்ட ஜியோ டாக்கிங் வசதியையும் வழங்குகிறது.

கேமராவை எடுத்துக் கொண்டால் எச்டி வசதி கொண்ட முகப்பு கேமராவையும் மற்றும் 5 மெகா பிக்சல் ரியர் கேமராவையும் வழங்குகிறது. அதுபோல இதன் ப்ளூடூத் தாறுமாறான வேகத்தைக் கொண்டிருக்கும். இதன் டிஸ்ப்ளே 7 இன்ச் ஆகும். இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X