Home
Computer

சினிமாத்துறையில் ஸ்கிரீன் எக்ஸ் டெக்னாலஜி...!

By Jagatheesh G

இப்பொழுது இருக்கும் திரைப்பட உலகம் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. திரைப்பட உலகில் பல வகையான டெக்னாலஜிகளை உருவாக்கி அதனை உலகிற்கு அறிமுகப்படுத்துகின்றன.

அவற்றின் சிறப்பை பார்க்கும் போது பிரம்மிப்பாக உள்ளது. நாம் அனைவரும் முப்பரிமாண திரைப்படங்களை 3டி கண்ணாடிகளைக் கொண்டு பார்த்திருப்போம் ஆனால் இனி வரும் காலத்தில் முப்பரிமாண படங்களை அவ்வாறு பார்க்கத் தேவையில்லை .

ஏனெனில் அதற்கு ஒரு புதிய டெக்னாலஜியை கண்டுபிடித்திருக்கிறார்கள் சீனர்கள். அதற்கு பெயர்தான் 'Screen X Technology' இதன் மூலம் 3டி கண்ணாடிகளை அணியாமல் 3டி படங்களை பார்க்க முடியும்.

ஸ்மார்ட் போன்களுக்கு

#1

#1

முப்பரிமாணத்துடன் கூடிய 3டி படங்கள் சிறப்பு ஒலி, ஒளி அமைப்புகளுடன் தயாரிக்கப்பட்டு திரைக்கு வருகின்றன. இப்படத்தை சிறப்பு கண்ணாடி அணிந்து மட்டுமே பார்க்க முடியும். வெறுங்கண்ணால் பார்த்தால் அதற்குரிய ஸ்பெஷல் எபெக்ட் கிடைக்காது.

#2

#2

தற்போது, 3டி படங்களையும் மிஞ்சும் வகையில் மிக பிரமாண்டமான சினிமா படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை சிறப்பு கண்ணாடி அணியாமல் சாதாரணமாக வெறுங்கண்ணால் பார்த்து ரசிக்க முடியும். கடந்த வாரம் புசான் சர்வதேச திரைப்பட விழா நிகழ்ச்சியில் சினிமா தொடர் சி.ஜே. சிஜிவி உருவாக்கப்பட்ட 30 நிமிடம் ஓடக்கூடிய ஸ்க்ரீன் எக்ஸ் படம் வெளியிட்டுள்ளனர்.

#3

#3

இந்த சினிமா 270 டிகிரி கோணத்தில் பார்க்கலாம். ஸ்கிரீன் எக்ஸ் தொழில்நுட்பத்தில் இந்த சினிமா படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரே காட்சியை ஒரே நேரத்தில் 3 கேமராக்களில் பலவித கோணங்களில் படம் பிடித்து அதை ஒருங்கிணைத்துள்ளனர்.

#4

#4

சிறப்பு அம்சங்களுடன் கூடிய இந்த சினிமா படத்தை தென்கொரிய டைரக்டர் கிம்ஜிவூன் உருவாக்கியுள்ளார். இதற்கு தி எக்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இது 30 நிமிடங்கள் ஓடக்கூடிய உளவாளி, திரில்லர் கதை அம்சத்துடன் கூடிய படமாகும். கடந்த வாரம் தென்கொரியாவின் புசானில் நடந்த சர்வதேச படவிழாவில் பிரீமியர் ஷோ ஆக இப்படம் திரையிட்டு காட்டப்பட்டது.

#5

#5

இந்த மாத இறுதியில் தென் கொரியாவில் உள்ள 31 சினிமா தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட உள்ளது. அதற்காக கூடுதல் திரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இச்சினிமா படம் உருவாக்கியது குறித்து டைரக்டர் கிம் ஜி வூன் கூறும் போது, ‘இந்த புதிய தொழில்நுட்பம் சினிமாவுக்கு மிகப்பெரிய பிரமாண்டத்தை கொடுத்துள்ளது' என்று கூறியுள்ளார்.

ஸ்மார்ட் போன்களுக்கு

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X