குறைந்த விலையில் புதிய என்விடியா டேப்லெட்!

இந்த வருடம் லாஸ் வேகாசில் நடைபெற்ற நுகர்வோர் கண்காட்சியில் என்விடியா ஒரு 7 இன்ச் டேப்லெட்டை அறிமுகம் செய்தது. டேக்ரா 3 வசதி கொண்ட இந்த டேப்லெட் 249 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில் இந்த புதிய டேப்லெட் மிகவும் குறைந்த விலைக்கு விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.
என்விடியாவின் தலைமை இயக்குனர் ஹான்கோ ஜென் சன் ஹூவாங் கூறும்போது நவீன டேக்ரா ப்ராசஸர்களைக் கொண்ட என்விடியாவின் புதிய டேப்லெட்டை குறைந்த விலைக்கு விற்க இருப்பதாக கூறி இருக்கிறார். மேலும் இந்த ஆண்டு மத்தியில் ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகள் 199 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்படும் அளவிற்கு குறைந்துவிடம் என்று கூறி இருக்கிறார்.
இப்போது ஆசஸ் ட்ரான்ஸ்பார்மர் ப்ரைம் மட்டும் டேக்ரா 3 ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. ஆனால் விரைவில் எல்ஜி மற்றும் எச்டிசியின் தயாரிப்புகளும் இந்த ப்ராசஸரைக் கொண்டுவரும். மேலும் இவை உயர்தர தயாரிப்புகளாக இருப்பதால் இவற்றின் விலையும் 199 அமெரிக்க டாலர்களுக்கு அதிகமாக இருக்கும்.
அதே நேரத்தில் இந்த வருடம் ஒரு 7 இன்ச் டேப்லெட்டை கூகுள் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த டேப்லெட் ஆசஸால் தயாரிக்கப்பட்டு 149 முதல் 199 அமெரிக்க டாலர்களுக்குள் விற்கப்படும் என்று தெரிகிறது. இது உண்மையாக இருக்குமானால் இந்த டேப்லெட் விற்பனையில் சாதனை படைக்கும் என்பதில் ஐயமில்லை.


Click it and Unblock the Notifications