புதிய பிஎஸ்என்எல் பென்டா டிபேட் டேப்லட்: ஒரு சிறப்பு கண்ணோட்டம்!

Posted By: Staff
புதிய பிஎஸ்என்எல் பென்டா டிபேட் டேப்லட்: ஒரு சிறப்பு கண்ணோட்டம்!
சமீபத்தில் 3 விலை குறைந்த டேப்லட்களை வெளியிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம் புதிதாக பென்டா டிபேட் டபிள்யூஎஸ்802-சி என்ற டேப்லட்டை உருவாக்கி உள்ளது. இந்த டேப்லட் நிச்சயம் பணத்திற்கு தகுந்த தொழில் நுட்பத்தினை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும்.

தெள்ள தெளிவான வெள்ளை நிறத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த டேப்லட், உயர்ந்த ரக தொழில் நுட்பங்களை கொண்டுள்ளது என்பதை தோற்றத்திலேயே வெளிப்படுத்தும் விதமாக இருக்கும். 8 இஞ்ச் திரையில் கலக்கும் இந்த டபிள்யூஎஸ்802சி டிபேட் 800 X 600 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் தரும். இந்த அகலமான திரையினால் 2 அல்லது 3 பேர் கூட சவுகரியமாக படங்களை பார்க்க முடியும்.

டேப்லட் போன்ற மின்னணு சாதனங்களை வாங்கும் போது அதன் பிராசஸரை சோதித்து பார்த்து வாங்குவது மிக முக்கியமான ஒன்று. ஏனெனில் டேப்லட் எந்த அளவு வேகமாக செயல்படும் என்பதையும் இதை வைத்து தான் முடிவு செய்ய முடியும். இதை பொருத்த வரை 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் இந்த டேப்லட் கொண்டுள்ளது என்றும் கூறலாம். கேம் போன்றவைகள் விளையாடும் போது பிராசஸர் சரியில்லை என்றால், விளையாட்டின் ஸ்வாரஸியமே குறைந்துவிடும்.

ஆனால் இந்த டேப்லட்டின் பிராசஸர் சிறப்பாக செயல்படும் என்பதால் விளையாட்டின் ஸ்வாரசியம் இன்னும் இரு மடங்காகும். இது ஆன்ட்ராய்டு ஹனிகோம்பு இயங்குதளத்தில் இயங்கும். கேம்ஸ், மூவி போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கு பேட்டரி சிறப்பான வகையில் ஒத்துழைப்பது மிகவும் முக்கியமான ஒன்று.

இந்த டேப்லட் ஆற்றல் கொண்ட 3,000 எம்ஏஎச் லித்தியம்-பாலிமர் பேட்டரியை வழங்கும். பிஎஸ்என்எல் படைப்பான இந்த டபிள்யூஎஸ்802-சி டேப்லட்டின் விலை ரூ.13,500 கொண்டதாக இருக்கும். பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த டேப்லட், டேப்லட் சந்தையை ஒரு கலக்கு கலக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot