சூப்பர் துல்லியத்தில் புதிய ஸ்வைப் டேப்லட்!

டேப்லட்டினை படைத்தளித்திருக்கிறது. இது 7 இஞ்ச் டிஎப்டி எல்சி திரை வசதியினை வழங்கும். தொட்டவுடன் பட்டென பறக்கும்தொடுதிரையில் கலக்கும் இந்த டேப்லட்டில் டியூவல் சிம் வசதியினையும் எளிதாக பெறலாம்.
இதன் 7 இஞ்ச் திரைக்கு, இதில் கிடைக்கும் துல்லியம் அதிகம் தான். இதில் 1028 X 768 பிக்ஸல் திரை துல்லியம் கொண்ட இதன் திரையில் நிச்சயம் தகவல்களை தெளிவாக பெற முடியும் என்று நம்பலாம். ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளத்தில் இருக்கும் பல அப்ளிக்கேஷன்களை இதில் படைக்கலாம்.
2 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் 1.3 முகப்பு கேமராவினை அளிக்கும் இந்த டேப்லட்டில் புகைப்படம், வீடியோ ரெக்கார்டிங், வீடியோ காலிங் ஆகிய வசதிகளை பெறலாம். 8 ஜிபி வரை இன்பில்டு மெமரி வசதிகளை கொடுக்கும் இந்த டேப்லட்டில் 32 ஜிபி வரை கூடுதல் மெமரி வசதியினை பயன்படுத்தி கொள்ள இதன் மைக்ரோஎஸ்டி ஸ்லாட் துணை புரியும்.
இதன் 4,000 எம்ஏஎச் பேட்டரி வசதி சிறப்பான தொழில் நுட்ப வசதிகளையும் சப்போர்ட் செய்யும். பிறகென்ன? 3ஜி, வைபை, ப்ளூடூத் போன்ற வசிதகள் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிற விஷயம். இதினால் இந்த டேப்லட் 3ஜி, வைபை மற்றும் தகவல்களை பரிமாற உதவும் ப்ளூடூத் ஆகிய வசதிகளை வழங்குவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.
இது மட்டும் அல்லாமல் இந்நிறுவனம் கடந்த ஜூலை மாதம் 3 டேப்லட்களை தொடர்ந்து வழங்கியது. அந்த டேப்லட்களில் 3டி வசதியினையும் பெற முடியும். ஸ்வைப் டேப் எக்ஸ்-745 என்ற பெயர் கொண்ட இந்த டேப்லட் ரூ. 5,999 விலையில் 3டி வசதியினை வழங்கும். ஸ்வைப் டேப் ஆல் இன் ஒன் டேப்லட் ரூ. 11,999 விலை கொண்டதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications