மனம் கவர வரும் புதிய ஸ்வைப் 3டி டேப்லட்!

இந்நிறுவனம் வெளியிட்ட ஸ்வைப் 3டி லைஃப் டேப்லட்டின் தொழில் நுட்ப வசதியினை பற்றி பார்ப்போம். ஆன்ட்ராய்டு என்றாலே அனைவரின் கண்களும அகலமாக விரிவதனை காணலாம்.
அந்த வகையில் இந்த டேப்லட் வாடிக்கையாளர்களை குளிர வைக்கும் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பேரட்டிங் சிஸ்டம் வசதியினை கொடுக்கும்.
1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஏ-13 கார்டெக்ஸ் பிராசஸரின் ஆற்றல் கொண்ட இந்த டேப்லட் 4 ஜிபி வரை இன்டர்னல் மெமரி விரிவுபடுத்தி கொள்ள கூடிய தன்மை கொண்டது.
இதில் வீடியோக்களை தொடர்ந்து 5-லிருந்து 6 மணி நேரம் வரை பார்க்கலாம். அந்த அளவுக்கு இதன் 3,400 எம்ஏஎச் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
2 மெகா பிக்ஸல் கேமரா வசதியினை கொண்ட இந்த டேப்லட், திரையிலும் வாடிக்கையாளக்களுக்கு திருப்தியை கொடுக்கும்.
இந்த 2 மெகா பிக்ஸல் கொண்ட முகப்பு கேமரா 1080பி துல்லியத்தில் வீடியோவினை கொடுக்க உதவும். இதன் 7 இஞ்ச் திரை தகவல்களை சிறப்பாக காட்ட பயன்படுகிறது.
மேலும் டேப்லட்கள் என்றாலே கையில் வசதியாக வைத்து கொள்ள உதவும் என்று கூறலாம். இதனால் 7 இஞ்ச் திரை கொண்ட டேப்லட்கள் கையில் வைத்து கொள்ள கச்சிதமாக இருக்கும்.
கறுப்பு, வெள்ளை என்ற நிறங்களில் வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்வைப் 3டி லைஃப் டேப்லட் ரூ. 5,999 விலை கொண்டதாக இருக்கும். மேல் கூறப்பட்டுள்ள அனைத்து வசதிகள் ரூ. 5,999 விலையில் கிடைக்கிறதென்றால் இது சிறந்த விஷயம் தான்.


Click it and Unblock the Notifications