3 புதிய டேப்லட்களை வெளியிடும் ஸ்வைப்!

By Super
|

3 புதிய டேப்லட்களை வெளியிடும் ஸ்வைப்!
நவீன தொழில் நுட்பம் கொண்ட 3டி டேப்லட்டினை ஸ்வைப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஸ்வைப் 3டி லைஃப், ஸ்வைப் ஹெலோ டேப் எக்ஸ்-74-எஸ் மற்றும் ஸ்வைப் ஃப்லோட் டேப்-எக்ஸ்-78 என்ற மூன்று டேப்லட்களையும் வெளியிட்டுள்ளது ஸ்வைப் நிறுவனம்.

ஸ்வைப் 3டி லைஃப் டேப்லட் இளைஞர்களையும், குழந்தைகளையும் எளிதாக கவர்ந்துவிடும் என்று கூட சொல்லலாம். இந்த 3டி டேப்லட் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பேர்டடிங் சிஸ்டம் கொண்டு இயங்கும்.

இந்த ஸ்வைப் 3டி லைஃப் இயங்குதளம் சிறப்பாக இதில் ஏ-13 கார்டெக்ஸ் பிராசஸரும் கூட பொருத்தப்பட்டுள்ளது. இந்த பிராசஸர் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும். இந்த டேப்லட் 800 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் வழங்கும். 4ஜிபி இன்டர்னல் வசதி கொண்ட வைபை மற்றும் 3ஜி தொழில் நுட்பத்திற்கும் எளிதாக சப்போர்ட் செய்யும்.

ஸ்வைப் 3டி லைஃப் டேப்லட் 3,400 எம்ஏஎச் பேட்டரியையும் இந்த டேப்லட்டில் இருப்பதால் 5 ணி நேரத்தில் இருந்து 6 மணி நேரம் வரை வீடியோ ப்ளேபேக் டைமினை வழங்கும்.

டேப்எக்ஸ்-78 ஃப்லோட் டேப்லட் ஆன்ட்ராய்டு 4.0.3 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டது. இந்த டேப்லட் ஹிந்தி லேங்குவேஜ் வசதிக்கும் எளிதாக சப்போர்ட் செய்கிறது. 1.5 ஜிகாஹெர்ட்ஸ் பாக்ஸ்சிப் ஏ-13 பிராசஸர் ஆற்றல் கொண்ட இந்த டேப்லட்டிலும் 3ஜி மற்றும் வைபை வசதியினை பெறலாம்.

டேப்-எக்ஸ்-74-எஸ் ஹெலோ டேப்லட் 7 இஞ்ச் திரை வசதி கொண்டது. சிம் கார்ட் பயன்படுத்தும் வசதியினையும் இந்த டேப்லட்டில் பெறலாம். இந்த டேப்லட்டும் ஆன்ட்ராய்டு 4.0.3 இயங்குதளம் கொண்டு இயங்கும்.

டேப்-எக்ஸ்-74-எஸ் ஹெலோ டேப்லட் 2 மெகா பிக்ஸல் மற்றும் 1.3 மெகா பிக்ஸல் கேமரா சிறப்பான புகைப்படத்தினை, வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெறலாம்.

இந்த டேப்லட் ரூ. 9,999 விலையினை கொண்டது.ஸ்வைப் 3டி லைஃப் டேப்லட்டை ரூ. 5,999 விலையிலும், டேப்-எக்ஸ்-78 ஃப்லோட் டேப்லட்டை ரூ. 6,999 விலையிலும் பெறலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X