தீபாவளிக்கு ஹாய்… சொல்லும் புதிய ஹலோ டேப்லட்கள்!

இது போன்று நமது நாட்டில் சிறப்பாக கொண்டாடப்படும் தீபாவளிக்கு புதிய எலக்ட்ரானிக் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இப்போது இந்த 2 புதிய டேப்லட்களின் விலையும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த 2 டேப்லட்களுமே ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விட்ச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும்.
கிட்டத்தட்ட இந்த இரண்டு டேப்லட்களிலும் நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது என்று கூறலாம். ஹலோ 3ஜி டேப் மற்றும் ஹலோ எட்ஜ் டேப்லட்கள் பாக்ஸ்சிப் ஏ-10 பிராசஸர் கொண்டு இயங்கும். அதோடு 7 இஞ்ச் டிஎப்டி எல்சிடி திரை தொழில் நுட்பத்தினையும் கொடுக்கும். இதில் 800 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் பெறலாம்.
ஹலோ 3ஜி டேப்:
- ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம்
- 5 பாயிண்டு டச் தொடுதிரை
- 7 இஞ்ச் திரை
- 800 X 480 பிக்ஸல் திரை துல்லியம்
- 3ஜி மற்றும் 3ஜி சிம் சப்போர்ட்
- 4 ஜிபி இன்டர்னல் மெமரி வசதி
- இந்த டேப்லட் ரூ. 9,999 விலை கொண்டதாக இருக்கும்
ஹலோ எட்ஜ் டேப்லட்:
- ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளம்
- வாய்ஸ் காலிங்
- 7 இஞ்ச் திரை வசதி
- 1.5 ஜிகாஹெர்ட்ஸ் பாக்ஸசிப் ஏ-10 பிராசஸர்
- 4 ஜிபி இன்டர்னல் மெமரி வசதி
- 32 ஜிபி வரை எக்ஸ்பேண்டபில் மெமரி வசதி
- 2 மெகா பிக்ஸல் முகப்பு கேமரா
- இந்த டேப்லட் ரூ. 8,999 விலை கொண்டதாக இருக்கும்


Click it and Unblock the Notifications