Home
Computer

அனல் பறக்கும் அக்னியுடன் மோதும் ஸ்வைப்!

By Super

அனல் பறக்கும் அக்னியுடன் மோதும் ஸ்வைப்!
சிறப்பான டேப்லட்கள் பற்றிய ஒப்பீட்டிற்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஸ்வைப் மற்றும் கார்பன் பற்றிய இந்த ஒப்பீடு சரியானதாக இருக்கும் என்று கூறலாம்.

ஸ்வைப் டேப் ஆன் இன் ஒன் மற்றும் கார்பன் அக்னி ஆகிய இந்த டேப்லட்களின் ஒப்பீடு பற்றி இங்கே பார்க்கலாம். இந்த இரண்டு டேப்லட்களும் சிறப்பான தொழில் நுட்பங்களை வழங்கினாலும், எந்த டேப்லட்கள் கூடுதல் வசதியினை கொடுக்கும் என்பதையும் இதில் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்வைப் ஆல் இன் ஒன் மற்றும் அக்னி ஆகிய இந்த டேப்லட்கள் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். ஸ்வைப் டேப்லட் தான் வழங்கும் தெளிவான தகவல்களை, தனது 7 இஞ்ச் திரை வசதியில் கொடுக்கும். ஸ்வைப்பின் இந்த ஆல் இன் ஒன் டேப்லட்டில் 1028 X 768 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெற முடியும்.

அக்னி டேப்லட்டும், ஸ்வைப் டேப்லட்டின் அதே 7 இஞ்ச் திரையினை தான் கொண்டிருக்கிறது. ஆனாலும் இதன் திரை துல்லியம், ஸ்வைப் ஆல் இன் ஒன் டேப்லட்டிற்கு ஒப்பிட்டு பார்க்கும் போது சற்று குறைவாக தெரிகிறது. கார்பன் அக்னி டேப்லட் 800 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும்.

ஸ்வைப் டேப்லட் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரையும், கார்பன் அக்னி டேப்லட் 1

ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரையும் கொண்டதாக இருக்கும். ஸ்வைப் டேப்லட் 8 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியினையும், அக்னி டேப்லட்டில் 4 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினையும் பெறலாம்.

மைக்ரோஎஸ்டி கார்டு மூலம் 32 ஜிபி கூடுதல் மெமரி ஸ்டோரேஜ் வசதியினை கொடுக்கும். இந்த ஸ்வைப் டேப்லட்டில் 2 மெகா பிக்ஸல் ரியர் கேமராவினையும், 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும்

கொடுக்கும். கார்பன் அக்னி டேப்லட்டில் 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினை பெறலாம். இந்த 2 டேப்லட்களிலும் கூற வேண்டிய முக்கிய விஷயம் இதில் 3ஜி நெட்வொர்க் வசதியினை பயன்படு்த்தலாம்.

இந்த 2 டேப்லட்களிலும் கூற வேண்டிய ஓர் சிறப்பம்சமும் உண்டு. இந்த டேப்லட்களில் சிம் ஸ்லாட் வசதியினை பெறலாம். அதிலும் ஸ்வைப் டேப்லட் டியூவல் சிம் ஸ்லாட் வசதிக்கு சிறப்பாக சப்போர்ட் செய்யும். இந்த 2 டேப்லட்களிலும் 4,000 எம்ஏஎச் பேட்டரியினை பெறலாம். ஸ்வைப் டேப்லட்டினை ரூ. 11,999 விலையிலும், கார்பன் அக்னி டேப்லட்டினை ரூ. 10,000 விலையிலும் பெறலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X