Home
Computer

7 இஞ்ச் டேப்லெட்டுடன் களமிறங்கும் ஸ்விங்டெல்!

By Karthikeyan
7 இஞ்ச் டேப்லெட்டுடன் களமிறங்கும் ஸ்விங்டெல்!

இந்த டேப்லெட் சந்தை இப்போது ஏராளமான டேப்லெட்டுகளால் நிரம்பி வழிகிறது. ஏராளமான நிறுவனங்கள் தங்களது படைப்புகளை போட்டி போட்டுக் கொண்டு அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இப்போது ஸ்விங்டெல் நிறுவனம் தனது முதல் டேப்லெட்டை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த டேப்லெட்டின் பெயர் ஹலோ டேப் ஆகும். இந்த டேப்லெட் 7 இன்ச் அளவு கொண்ட ஒரு அன்ட்ராய்டு டேப்லெட் ஆகும்.

இந்த ஹலோ டேப்லெட்டின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது ஆன்ட்ராய்டு 2.2 ப்ராயோ இயங்கு தளத்தைக் கொண்டிருக்கிறது. மேலும் இது 7 இன்ச் அளவில் தொடு வசதி கொண்ட டபுள்யுவிஜிஎ கெப்பாசிட்டிவ் திரையைக் கொண்டுள்ளது. இதன் பார்சஸர் 800 எம்ஹெர்ட்ஸ் கடிகார வேகம் கொண்ட க்வல்காம் எம்எஸ்எம் 7x20 சர்ப் ஆகும். அதுபோல் இந்த டேப்லெட் அட்ரினோ 200 ஜிபியுவைக் கொண்டுள்ளது.

இணைப்பு வசதிகளைப் பார்க்கும் போது இந்த டேப்லெட் ப்ளூடூத் 2.1, வைபை 802.11 பி/ஜி/என், ஜிஎஸ்எம், ஜிபிஆர்எஸ் போன்ற இணைப்பு வசதிகளைக் கொண்டுள்ளது. இந்த டேப்லெட்டின் இன்டர்னல் மெமரி 16 ஜிபி ஆகும். மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு மூலமாக இந்த மெமரியை 32 ஜிபி வரை அதிகரிக்க முடியும். அதுபோல் இந்த டேப்லெட் 512 எம்பி டிடிஆர் எஸ்டி ரேமைக் கொண்டுள்ளது.

கேமராவைப் பொருத்த மட்டில் இந்த டேப்லெட் 2 கேமராக்களைக் கொண்டுள்ளது. இதன் பின்பக்க கேமரா 5 மெகா பிக்சல் ரிசலூசனையும் இதன் முகப்பு கேமரா விஜிஎ பிக்சல் ரிசலூசனையும் கொண்டுள்ளது. மின் திறனிற்காக இந்த டேப்லெட் 4250 எம்எஎச் சக்தி கொண்ட லித்தியம் ஐயன் பேட்டரியைக் கொண்டிருக்கிறது. இந்த பேட்டரி 10 மணி நேர இயங்கு நேரத்தை இந்த டேப்லெட்டிற்கு அளிக்கிறது.

இந்த ஹலோ டேப்லெட் ஸ்விங்டெல் நிறுவனத்தின் முதல் டேப்லெட்டாக இருந்தாலும் மிகவும் உயர்ந்த தரத்தில் வருகிறது. இந்த டேப்லெட் கருப்பு மற்றும் சில்வர் ஆகிய 2 வண்ணங்களில் வருகிறது. இதன் டச் சென்சிட்டிவ் பட்டன்கள் முன்புறமும், இன்டக்ரேட்டட் ஸ்பீக்கர்கள் இதன் திரையின் கீழ் பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஹலோ டேப்லெட் 800 x 480 பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது. இந்த டேப்லெட்டின் விலை ரூ.20,000 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X