இந்தியாவிற்கான மைக்ரோசாஃப்ட் வழங்கும் சக்தி வாய்ந்த 2 இன் 1 லேப்டாப்கள்

  மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை பொறுத்த வரை, இதுவரை வெளியிடப்பட்டுள்ளவற்றிலேயே i7 சிப்செட் கொண்ட சர்ஃபேஸ் புக் 2 தான் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.

  மைக்ரோசாஃப்ட் வழங்கும் சக்தி வாய்ந்த 2 இன் 1 லேப்டாப்கள்.!

  இந்தியாவில் ரூ.86,999 என்ற விலை நிர்ணயத்தில் மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் புக் 2 என்ற 2 இன் 1 லேப்டாப்களை, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. விண்டோஸ் 10 மூலம் இயக்கப்படும் இந்த நோட்புக்கள், இந்தியாவில் 13.5 இன்ச் மற்றும் 15 இன்ச் அளவில் அமைந்த டிஸ்ப்ளே வகைகளில் கிடைக்கும்.

  சர்ஃபேஸ் லேப்டாப் மற்றும் சர்ஃபேஸ் புக் 2 பதிப்புகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவிற்காக மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ள இந்த புதிய வெளியீடுகள், நாடெங்கிலும் உள்ள கடைகளிலும் ஆன்லைனிலும் கிடைக்கும்.

  சர்ஃபேஸ் லேப்டாப் சிறப்பம்சங்கள்
  சர்ஃபேஸ் லேப்டாப்பில் 13.5 இன்ச் 1080p IPS LCD டிஸ்ப்ளே உடன் டார்ச் உள்ளீடு திறனும் 2256x1504 px பகுப்பாய்வு மூலம் ஒரு இன்ச்சிற்கு பிக்சல்சென்ஸ் டிஸ்ப்ளே உடன் 201 பிக்சல்களை அளிக்கிறது. இந்த சாதனங்களுக்கு 7 ஆம் தலைமுறையைச் சேர்ந்த கோர் i5-7200U அல்லது 7 ஆம் தலைமுறையைச் சேர்ந்த கோர் i7-7660U மூலம் இயங்கி, ப்ளூடூத் 4.0 மற்றும் வைஃபை 802.11a/b/g/n/ac ஆதரிக்கும்.


  சர்ஃபேஸ் நோட்புக் 2 சிறப்பம்சங்கள்
  சர்ஃபேஸ் புக் 2 இல் இரு அளவுகளில் கிடைக்கிறது. 13.5 இன்ச் மாடலில் 3000 x 2000px பகுப்பாய்வு உடன் கூடிய IPS LCD டிஸ்ப்ளே கொண்டிருக்கும். 15 இன்ச் மாடலில் 3240x2160 பகுப்பாய்வு உடன் கூடிய டிஸ்ப்ளே மூலம் ஒரு இன்ச்சிற்கு 267 பிக்சல்கள் என்ற அளவில் வெளியிடுகிறது. இதன்மூலம் சர்ஃபேஸ் பேன் மற்றும் சர்ஃபேஸ் டயல் ஆகியவற்றுடன் இணக்கமாக உள்ளது.

  செயலியை பொறுத்த வரை, சர்ஃபேஸ் புக் 2 இல் 8வது தலைமுறையைச் சேர்ந்த இன்டல் கோர் i7-8650U அல்லது 7வது தலைமுறையைச் சேர்ந்த இன்டல் கோர் i5-7300U ஆற்றலை பெறுகிறது. அதனுடன் Nvidia GTX 1050 அல்லது GTX 1060 GPU உடன் இணைந்து செயல்படுகிறது.

  மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் மாடல்களும் விலை விவரமும்

  கோர் i5 உடன் 128GB SSD, 8GB ரேம், இன்டல் HD கிராஃபிக்ஸ் 620 - இந்தியாவில் சில்லறை விலையாக ரூ.86,999

  இன்டல் கோர் i5 உடன் 256GB SSD, 8GB ரேம், இன்டல் HD கிராஃபிக்ஸ் 620 - இந்தியாவில் சில்லறை விலையாக ரூ.1,14,999

  இன்டல் கோர் i7 உடன் 256GB SSD, 8GB ரேம், இன்டல் இரிஸ் ப்ளஸ் 640 - இந்தியாவில் சில்லறை விலையாக ரூ.1,44,999

  இன்டல் கோர் i7 உடன் 512GB SSD, 16GB ரேம், இன்டல் இரிஸ் ப்ளஸ் 640 - இந்தியாவில் சில்லறை விலையாக ரூ.1,96,999

  இன்டல் கோர் i7 உடன் 1TB SSD, 16GB ரேம், இன்டல் இரிஸ் ப்ளஸ் 640 - இந்தியாவில் சில்லறை விலையாக ரூ.2,33,999

  மைக்ரோசாஃப்ட் வழங்கும் சக்தி வாய்ந்த 2 இன் 1 லேப்டாப்கள்.!


  மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் புக் 2 மாடல்களும் விலை விவரங்களும்

  13.5 இன்ச் மாடல்கள்

  இன்டல் கோர் i5 உடன் 256GB SSD, 8GB ரேம், இன்டல் HD கிராஃபிக்ஸ் 620 - இந்தியாவில் சில்லறை விலையாக ரூ.1,37,999

  இன்டல் கோர் i7 உடன் 256GB SSD, 8GB ரேம், Nvidia ஜிஃபோர்ஸ் GTX 1050 - இந்தியாவில் சில்லறை விலையாக ரூ.1,85,999

  இன்டல் கோர் i7 உடன் 512GB SSD, 16GB ரேம், Nvidia ஜிஃபோர்ஸ் GTX 1050 - இந்தியாவில் சில்லறை விலையாக ரூ.2,22,999

  இன்டல் கோர் i7 உடன் 1TB SSD, 16GB ரேம், Nvidia ஜிஃபோர்ஸ் GTX 1050 - இந்தியாவில் சில்லறை விலையாக ரூ.2,57,999

  மைக்ரோசாஃப்ட் வழங்கும் சக்தி வாய்ந்த 2 இன் 1 லேப்டாப்கள்.!

  15 இன்ச் மாடல்கள்

  இன்டல் கோர் i7 உடன் 256GB SSD, 16GB ரேம், Nvidia ஜிஃபோர்ஸ் GTX 1060 - இந்தியாவில் சில்லறை விலையாக ரூ.2,22,499

  இன்டல் கோர் i7 உடன் 512GB SSD, 16GB ரேம், Nvidia ஜிஃபோர்ஸ் GTX 1060 - இந்தியாவில் சில்லறை விலையாக ரூ.2,58,999

  இன்டல் கோர் i7 உடன் 1TB SSD, 16GB ரேம், Nvidia ஜிஃபோர்ஸ் GTX 1060 - இந்தியாவில் சில்லறை விலையாக ரூ.2,95,999


  English summary
  Surface Book 2 Surface Laptop range of laptops now available in India Price starts at Rs 86999 : Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more