ஸ்பைவேர் பற்றி தெரியுமா உங்களுக்கு?

By Keerthi
|

நமது இன்டர்நெட் பயன்பாட்டின்போது வேகம் குறைந்து கணினி மெதுவாக இயங்குகிறதா? வெப் பிரவுஸரில் ஒரு முகவரியை டைப் செய்ய நீங்கள் விரும்பாத் வேறொரு தளத்தைக் பிரவுசர் காண்பிக்கிறதா?

பிரவுசரில் அடிக்கடி பொப்-அப் Pop-up விளம்பரங்கள் தோன்றுகிறதா? உங்களை அறியாமலேயே பிரவுசரின் ஹோம்பேஜ் மாற்றப்பட்டுள்ளதா? சந்தேகமே வேண்டாம். உங்கள் கணினி ஸபைவேரால் பாதிக்கப்பட்டுள்ளது என உறுதியாகசக் கூறலாம்.

ஸ்பைவேர் என்பது நீங்கள் அறியாமலேயே அல்லது உங்கள் சம்மதம் இல்லாமலேயே கணினியில் வந்து உட்கார்ந்து கணினியில் உங்கள் நடவடிக்கைகளைப் பதிவு செய்வதோடு உங்கள் அந்தரங்க தகவல்களைச் சேகரித்து அதனை உருவாக்கியவருக்கு அவ்வப்போது அனுப்பிக் கொண்டிருக்கும் ஒரு தீங்கிழைக்கும் மென்பொருளாகும்.

இணையத்தில் உலாவும் போது யாரோ ஒருவர் ஸ்பைவேரைப் பயன்படுத்தி உங்கள் கணினியிலிருந்து ஏதோ ஒரு தகவலைப் பெற முயற்சிக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்

ஸ்பைவேர் பற்றி தெரியுமா உங்களுக்கு?

ஸ்பைவேர் கணினியில் மறைந்திருந்து உங்கள் அந்தரங்க தகவல்களை தீய சக்திகளின் கையில் போய் சேர்த்து விடுகிறது. உதாரணமாக இணையம் வழியே ஒரு பொருளைக் கொள்வனவு செய்வதற்காக ஒரு படிவத்தை நிரப்பும்போது உங்கள் பெயர் முகவரி, வங்கிக் கணக்கு விவரம் மற்றும் கிரடிட் காட் விவரங்களை டைப் செய்ய வேண்டியிருக்கும். அப்போது ஸ்பைவேர், கீபோர்டில் நீங்கள் டைப் செய்தவற்றைப் பதிவு செய்து தனது எஜமானருக்கு அனுப்பி வைக்கிறது.

.ஸ்பைவேர் என்பது ஒரு வைரஸ் அல்ல. அது கணினியைத் தாக்கும் நோக்கில் உருவாக்கப்படுவதுமல்ல. வைரஸ் போன்று கணினிக்கு கணினி பரவுவதுமில்லை கணினியிலிருந்து தகவல்களைத் திருடும் நோக்கிலேயே இவை உருவாக்கப்படுகின்றன. கணினியிலுள்ள முக்கிய ஆவணங்கள் படங்கள் வீடியோக்கள் போன்றவயும்கூட திருடப்படலாம்.

தினமும் ஏராளமான கணினிகள் ஸ்பைவேர்களினால் பாதிக்கப்படுகின்றன. இணையத்தில் இணைந்துள்ள 90 வீதமான கணினிகள் ஸ்பைவேரினால் பாதிக்கப் பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இவை எத்தனை முறை நீக்கினாலும் திரும்பத் திரும்ப தானாவே நிறுவிக் கொள்ளும் வகையில் உருவாக்கப்படுகின்றன.

இணையத்திலிருந்து ஏதேனும் ஒரு பைலை அல்லது மென்பொருளை டவுன்லோட் செய்யும் போது உங்களை அறியாமல் ஸ்பைவேரும் அவற்றோடு சேர்த்து உமது கணினியில் வந்து சேர்ந்து விடும். அனேகமான ஸ்பைவேர்கள் இலவசமாகக்க் கிடைக்கும் (Freeware) மென்பொருள்களில் இரகசியமாக இணைக்கப்பட்டிருக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X