Home
Computer

ஐபால் டேப்லெட்டை வீழ்த்துமா புதிய ஸ்பைஸ் டேப்லெட்?

By Super

ஐபால் டேப்லெட்டை வீழ்த்துமா புதிய ஸ்பைஸ் டேப்லெட்?
டேப்லெட் சந்தையில் நிறுவனங்களிடையே ஒரு பெரிய யுத்தமே நடந்து கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஸ்பைஸ் மற்றும் ஐபால் ஆகிய நிறுவனங்கள் போட்டா போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன.

ஸ்பைஸ் தனது எம்ஐ என்ற குறியீட்டு பெயரில் புதிய டேப்லெட்டை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் ஐபால் ஸ்லைடு என்ற தனது புதிய டேப்லெட்டை அறிமுகப்படுத்தி இரக்கிறது. இந்த இரண்டு புதிய டேப்லெட்டுகளும் அமர்க்களமான சிறப்புகளைக் கொண்டிருந்தாலும் இந்த இரண்டின் இடையே சந்தையில் கடுமையான போட்டி நிலவுகிறது.

ஐபால் ஸ்லைடு டேப்லெட்டும் மற்றும் ஸ்பைஸ் எம்ஐ டேப்லெட்டும் 7 இன்ச் கெப்பாசிட்டிவ் மல்டி டச் திரையைக் கொண்டுள்ளன. எம்ஐ டேப்லெட்டின் பரப்பு 200×116.5×12.5 மிமீ ஆகும். அதன் எடை 485 கிராம் மட்டுமே. ஆனால் ஐபால் ஸ்லைடு பக்காவான திரையுடன் எச்டி தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. மெமரி சேமிப்பைப் பொறுத்தவரை இந்த 2 டேப்லெட்டுகளுமே 30ஜிபி அளவைக் கொண்டுள்ளன.

கேமராவைப் பொறுத்தவரை ஐபால் ஸ்லைடு அபாரமான முகப்புக் கேமராவைக் கொண்டிருந்தாலும் அது ரியர் கேமராவை வழங்குவதில்லை. ஆனால் ஸ்பைஸ் எம்ஐ டேப்லட் 2 மெகா பிக்ஸல் முதன்மை கேமரா மற்றும் விஜிஏ முகப்பு கேமராவும் கொண்டு அசத்துகிறது.

ஐபால் ஸ்லைடு வி2.3 ஆன்ட்ராய்டு ஜிஞ்சர்ப்ரீடு இயங்கு தளத்தைக் கொண்டிருக்கிறது. ஆனால் ஸ்பைஸ் எம்ஐ வி2.2 ஆன்ட்ராய்டு ப்ரேயோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்டுள்ளது.

பிராசஸரைப் பொறுத்தவரை ஐபால் 1ஜிகா ஹெர்ட்ஸ் ஏஆர்எம் கார்டெக்ஸ் பிராசஸரையும் அதே நேரத்தில் ஸ்பைஸ் 800 மெகா ஹெர்ட்ஸ் சினாப்ட்ராகன் எஸ்1 பிராசஸரையும் கொண்டுள்ளது. ஸ்பைஸ் டேப்லெட்டில் 3டி சப்போர்ட் மற்றும் ஜிபிஆர் எஸ் இணைப்பு கிடையாது. ஆனால் ஐபாலில் 3ஜி வசதியைப் பயன்படுத்த வேண்டுமானால் தனியாக டேட்டா கார்டு வாங்க வேண்டும்.

பேட்டரியைப் பொறுத்தவரை ஐபால் முந்துகிறது. அதாவது இதன் 4,400 எம்ஏஎச் எல்ஐ பேட்டரி நீண்ட இயங்கு நேரத்தையும், அதிக ஸ்டான்ட் பை நேரத்தையும் வழங்குகிறது. அதே நேரத்தில் ஸ்பைஸ் எம்ஐ 4,200 எம்ஏஎச் எல்ஐ பேட்டரியை வழங்குகிறது. ஸ்பைஸ் எம்ஐ டேப்லெட் ரூ.12000 விலையிலும், ஐபால் ஸ்லைடு ரூ.14000 விலையிலும் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X