மலிவு மற்றும் நடுத்தர விலையில் வரும் புதிய ஸ்பைஸ் டேப்லட்டுகள்

ஸ்பைஸ் மொபைலின் வர்த்தக மேலாளர் திரு. பாயல் காபா கூறும் போது ஸ்பைஸ் நிறுவனம் 9.7 இன்ச் திரை கொண்ட இரண்டு ஆண்ட்ராய்டு டேப்லட்டுகளை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார். இந்த இரண்டில் ஒன்று நடுத்தர விலையிலும் மற்றொன்று மலிவு விலையிலும் இருக்கும். இந்த 2 டேப்லட்டுகளுமே ரூ.20000க்குள் இருக்கும் என்று கூறுகிறார்.
இந்த புதிய ஸ்பேஸ் டேப்லட்டுகளை 24 மணி நேரமும் எல்லாவிதமான் டிவைஸ்களோடும் இணைக்க முடியும். குறிப்பாக இதன் மலிவு மற்றும் நடுத்தர விலையால் சாதாரண மக்களும் இந்த டேப்லட்டுகளை வாங்க முடியும். இந்த டேப்லட்டுகள் 800எம்ஹெர்ட்ஸ் க்வல்காம் ஸ்நாப்ட்ராகன் ப்ராசஸர் கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு ப்ராயோ இயங்குதளத்தில் இயங்குகிறது.
மற்ற வசதிகளைப் பார்த்தால் இந்த ஸ்பைஸ் டேப்லட்டுகள் 7 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கும். இதன் தொடுதிரை 800/480 பிக்ஸல் ரிசலூசனையும், எச்டி வீடியோ ப்ளே பேக்கையும் கொண்டிருக்கிறது. மேலும் இது வைபை மற்றும் ப்ளூடூத் வசதியையும் வழங்குகிறது. அடுத்ததாக இதன் ரியர் கேமரா 2 மெகா பிக்சல் ஆகும். அதுபோல் இதன் முகப்பு கேமரா 0.3 மெகா ப்க்ஸல் ஆகும்.
மேலும் இந்த டேப்லட்டுகள் 3.5எம்எம் ஸ்டீரியோபோனிக் ஹெட் செட்டையும் வீடியோ ரிக்கார்டிங் வசதியையும் வழங்குகிறது. இது 32ஜிபி வரை அதிகரிக்கக் கூடிய 155 எம்பி இண்டர்னல் மெமரியை வழங்குகிறது. மேலும் இது ஜிபிஎஸ் மற்றும் எச்டிஎஸ்பிஎ வசதியையும் அளிக்கிறது.
இதன் பரப்பைப் பார்த்தால் அது 200மிமீ X 116.5மிமீ X 12.55மிமீ ஆகும். மேலும் இது 4200எம் ஹர்ட்ஸ் திறன் கொண்ட பேட்டரியையும் வழங்குகிறது. மேலும் இதில் தொடர்ந்து 20 முதல் 25 மணி நேரம் வரை பேச முடியும். இதன் ஸ்டேன்ட்பை நேரம் 500 மணியாகும். மேலும் இதில் இன்பில்ட் லவுட் ஸ்பீக்கர் மற்றும் வீடியோ ப்ளேயர் மற்றும் மீயூசிக் ப்ளேயரும் உள்ளது.


Click it and Unblock the Notifications