சைபர் போர் : தயாராகும் தென் கொரியா.!!

By Meganathan
|

உலகெங்கும் ஹேக்கிங் மற்றும் சைபர் தாக்குதல் மூலம் இழப்புகள் மற்றும் தகவல் திருட்டு போன்ற சம்பவங்கள் அதிகரிக்க துவங்கியுள்ளன. இந்நிலையில் அடிதடி இல்லாமல், உயிர் இழப்புகள் இல்லாமல் இண்டர்நெட் கொண்டு இரு நாடுகள் மோதிக்கொள்ள தயாராகி விட்டன.

அதன் படி தென் கொரியா தனக்கென சொந்தமாக சைபர் ராணுவம் ஒன்றை உருவாக்கி வருகின்றது. தனது எதிரி நாடான வட கொரியாவின் சைபர் சார்ந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தென் கொரியா சைபர் ராணுவத்தை உருவாக்கி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

01

01

இதற்கென தென் கொரியா தலைநகரமான சியோல் பகுதியில் அமைந்திருக்கும் பாரம்பரிய கொரிய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு ரகசியமாக பயிற்சி அளிக்கப்படுவதாக ராய்ட்டர்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

02

02

சைபர் பாதுகாப்பு குறித்து வகுப்புகளில் ஈடுபடும் மாணவர்கள் நம்பர் மூலம் அடையாளம் காணப்படுவதோடு அவர்களின் சார்ந்த தகவல்கள் வெளியுலகம் அறிந்திராத படி ரகசியமாக வைக்கப்படுகின்றது.

03

03

இந்த வகுப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அந்நாட்டின் சைபர் டிஃபென்ஸ் பாடத்திட்டத்தின் கீழ் கற்பிக்கப்படுகின்றது.

04

04

21-வயதான மாணவர் நோஹ் தனது தந்தையின் வழிகாட்டுதலின் படி இந்த பாடத்திட்டத்தில் ஆர்வமுடன் பங்கேற்றதாக தெரிவித்துள்ளார். மேலும் சிறு வயது முதல் தனக்கு சைபர் செக்யூரிட்டி மற்றும் கணினி சார்ந்த துறையில் ஆர்வம் அதிகம் என்றும் தெரிவித்துள்ளார்.

05

05

'இது வெறும் பாடத்திட்டமாக மட்டுமில்லாமல் இதில் எனது வாழ்க்கையை உயர்த்திக்கொள்ள ஒரு திட்டமாகவும் இருக்கின்றது' என நோஹ் தெரிவித்தார்.

06

06

சைபர் போராளி என்ற பணியில் என்னையே நாட்டிற்காக அறப்ணித்து கொள்வது பெருமையாக இருப்பதாகவும் நோஹ் தெரிவித்தார்.

07

07

தென் கொரியாவின் சைபர் டிஃபென்ஸ் திட்டம் 2011 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, அதில் இளம் பிரோகிராம்மர்கள் உதவித்தொகை மூலம் பயிற்றுவிக்கப்படுகின்றனர்.

08

08

தென் கொரிய இளைஞர்கள் அனைவரும் அந்நாட்டு ராணுவத்தில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு கட்டாயம் பணியாற்ற வேண்டும்.

09

09

பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு மாதம் won 500,000 அதாவது இந்திய மதிப்பில் ரூ..29,098.97 ஒவ்வொரு மாதமும் வழங்கப்படுவதாக கொரிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜியோங் இக்ரோ தெரிவித்தார்.

10

10

இத்திட்டத்தில் தற்சமயம் சுமார் 30 மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் மூன்று நாள் நேர்முக தேர்வில் கலந்து கொள்வர்.

11

11

நேர்முக தேர்வில் மாணவர்களை ராணுவ அதிகாரிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் கேள்வி கேட்பதோடு மாணவர்களின் உடல் திறன் சோதனை செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

12

12

வட கொரியாவில் அர்பணிக்கப்பட்ட சைபர் போராளிகள் இயங்கி வருவதோடு இவர்கள் இம்மாத துவக்கத்தில் தென் கொரியாவின் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் சைபர் தாக்குதல் புரிந்ததாகவும், அதனினை தென் கொரியா முறியடித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
South Korea trains cyber warriors to fight threats from North Korea Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X